ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

சனி, 3 டிசம்பர், 2022

காலமும் நானும்

 

காலமும் நானும்:-

வெகுநாட்கள் ஆகிறது

ஒரு காதல் கவிதை எழுதி

நீ என்றது காலம் 

காதல் என்றால் என்றேன் நான்...

காதல் என்றால் காதல் தான்

என்றது காலம்...

ஓ அப்படியா..

இப்போது சொல்கிறேன் காதலை என்றேன்..

எங்கே வேகமாக எழுது என்றது காலம்...

இதோ இங்கே நழுவி சென்ற

அந்த நொடி என்னை நேசிப்பதாக சொல்லி

சென்றதை இப்போது தான்

கவனித்தேன்...

அந்த நொடிக்கான கவிதை இது...

நீ நேசித்த அந்த பொழுதில்

நான் எங்கோ தொலைந்திருந்தேன்..

நான் உன் காதலை உணர்ந்து தேடிய போது

நீ எங்கோ புதைந்து போனாய்...

இங்கே காதல் எனும் உணர்வை தான்

நீயும் நானும் நேசித்து கிடந்தோம்..

அதை நீ எங்கோ இருந்து

உணர்கிறாய்..

நான் இங்கிருந்து உணர்கிறேன்...

எப்படி கவிதை என்றேன் காலத்திடம்...

எங்கே சுற்றியும் நீ

என்னை தவிர எவரையும் காதலிக்க போவதில்லை என்று மெலிதாக காதலோடு

சிரித்து விட்டு நகர்ந்தது..

நானோ சற்று பொறு காலமே

உனக்கான தேநீர் நீ இன்னும் சுவைக்கவில்லை என்றேன்

சற்று கடமைகள் உள்ளது

மாலையில் வருகிறேன் என்று சொல்லி காதலோடு விடை பெற்று சென்றதை

நான் காதலோடு உணர்கிறேன் கையசைத்து...

#காலமும்நானும்

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பெரும் போரின் உக்கிரத்தை தணித்து...

 நீயோ குருட்டு பிடிவாதத்தால் எவரின் தூண்டுதலாலோ விலகி விலகி பயணிக்கிறாய்  என்னிடம் இருந்து... அந்த உக்ரைனை போல... நானோ உன்னை  என் பேரன்பின் ...