இதமான இரவொன்றில்
கரைகிறேன்
எனை மறந்து...
குளிரும் இல்லா
வெப்பமும் இல்லா
இந்த காலநிலை
ஒரு வித பேரமைதியை
தருகிறது...
இங்கே துணையின்றி
பயணிப்பது
ஆனந்த சொரூபமே என்று
இந்த கடற்கரை நிலவொளி
எனக்கு பாடம் நடத்துகிறது
தனது ஒளிவெள்ளத்தில்..
அத்தனை நினைவுகளையும்
அலையில் கரைத்து
அமைதிக் கொள்ள
துடிக்கிறது மனது..
பேரண்டத்தின் அமைதியை
இங்கே யார் புரிந்துக் கொள்ள கூடும்..
சம்சாரம் எனும்
தணலில் அமைதியின் தேடலை துவங்கி
முடிவற்ற பயணத்தில்
தனது இருப்பை தேடி
அலைகிறது பொல்லா மனது
அதற்கான இருப்பை
எவரும் களவாடவில்லை என்று இங்கே எவரேனும்
சொல்லுங்கள்...
களவாடப்பட்டது முற்றிலும்
வடிவமற்று பயணிக்கும்
ஆன்மாவின் பேரானந்த பெருநிலை என்று..
#இரவும்நானும்
#இளையவேணிகிருஷ்ணா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக