நதியின் போக்கை
இங்கே
யார் அறியக் கூடும் ?
சில சமயங்களில்
வேகமாக
சில சமயங்களில்
நிச்சலனமான அமைதியாக
எப்படி இருப்பினும்
அதன் நகர்வில்
தொலைகிறேன்..
ஏதேதோ எண்ணத்தை
அந்த நதி என்னிடம்
வலுக்கட்டாயமாக
பிடுங்கி கடத்தி விட்டால்
இன்னும் இன்னும்
பெரும் ஆனந்தம்...
நதியின் தன்மை
எப்போதும் எவரிடமும் எதையும்
அபகரிப்பது இல்லை
என்பதே உண்மை...
நான் அதில் எனது
எண்ணங்களை
தூக்கி போட்டு விட்டால் போதும்
அது கடத்தி வெகுதூரத்தில்
அதை போட்டு விடும்
என்பது தெரிந்தும்
ஒரு பெரும் பற்றோடு
அதை பிடித்து அலைகிறேன்
இங்கே புத்தி சுவாதீனம்
இல்லாமல்..
நதியோ அதை பற்றி
கவலை இல்லாமல்
நிச்சலனமாக
பயணிக்கிறது...
அந்த நிச்சலனமான நிலையை
இங்கே
நான் அடைய
எத்தனை யுகங்கள் ஆகும்
என்னுள் எழும் கேள்விகள்
கேட்பாரற்று
அந்த நதிக் கரையோரம்
காற்றில் கரைகிறது...
நதியின் போக்கை இங்கே
யார் அறியக் கூடும்?
எனக்குள் எழும்
ஆயிரம் ஆயிரம் கேள்விகளில்
இந்த கேள்வியையும் தான்
அந்த நதி கரையோர காற்று
கடத்தி செல்கிறது
வெகுதொலைவிற்கு..
#இளையவேணிகிருஷ்ணா.
#நதியும்நானும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக