ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

செவ்வாய், 6 ஜூன், 2023

உங்களுக்கு ஏன் பொறாமை?


எழுத்து உனக்கு சோறு போடுகிறதா என்று அங்கே எனது வீட்டில் வாழும் மனிதர்கள் உட்பட கேள்விக் கணைகளால் எரிச்சல் மூட்டுகிறார்கள்!

நான் அவர்களுக்கு சொல்லும் பதில் இதுதான்...
எனது எழுத்தை நான் சோறு போட சொல்லி கட்டாயப்படுத்தவில்லை!
உங்களை போல அதற்கு குத்தி பேசி மனதை நோகடிக்க தெரியாது!
நான் அதை அப்படி பழக்கப்படுத்தவும் இல்லை...
நான் அதற்கு கற்றுத் தந்தது எல்லாம் ஒன்றேயொன்று தான்...
நான் மனிதர்களால்
காயப்படும் போது உனது கற்பனையால் மயிலிறகாக
கொஞ்சம் வருடி விடு போதும்
நான் இன்னும் பயணிக்க வேண்டிய தூரம் அதிகம் உள்ளது என்று தான் சொல்லி தந்து இருக்கிறேன்...
அது புரிந்துக் கொண்டு என் மனதை ஆசுவாசப்படுத்தி அதன் இதழ்களால்
கொஞ்சம் முத்தமிட்டு விட்டு
தேவையறிந்து சேவை செய்கிறது..
உங்களுக்கு ஏன் பொறாமை????
#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பெரும் போரின் உக்கிரத்தை தணித்து...

 நீயோ குருட்டு பிடிவாதத்தால் எவரின் தூண்டுதலாலோ விலகி விலகி பயணிக்கிறாய்  என்னிடம் இருந்து... அந்த உக்ரைனை போல... நானோ உன்னை  என் பேரன்பின் ...