ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

புதன், 7 ஜூன், 2023

சற்றே அமைதியாக இரு மனமே...

 


நான் எழுதும் எழுத்தில் நான்

ஏதோ சொல்ல

வருவதாக

நினைக்கிறார்கள்..

உண்மையில்

நான் எதையும்

சொல்ல விரும்புவதில்லை

நடக்கும் நிகழ்வில்

அமைதியாக

பயணிக்கவே விரும்புகிறேன்..

என் மனம் எனும்

குறிப்பேடு

நான் ஏதோ சொல்ல வருவதாக நினைத்து

இங்கே கிறுக்கி விடுகிறது..

அது ஏதோ கிறுக்கி விட்டு

அமைதியடைந்து

தன் வேலையை

பார்க்க சென்று விடுகிறது..

இங்கே ஆழ்ந்த தியானத்தில்

இருக்கும்

எனை கொஞ்சம் எழுப்பி

அதன் பொருள் என்ன

என்று எனை கேட்டு தொல்லை செய்பவர்களிடம்

நான் என்ன ஏது என்று

கேட்கும் போது

நானே எனக்கு 

அந்நியனாகி போகிறேன்..

சற்றே அமைதியாக இரு

மனமே...

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாழ்க்கை ஒரு சமன்பாடு தான் -சூபிஞானி கதை 🎉🦋

  வணக்கம் நேயர்களே 🎻🙏  இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட...