எமனோடு ஓர் பயணம்:-(1)
ஏதோ ஆழ்ந்த யோசனையில் இருந்தேன் என்று சொல்லி விட முடியாது.. ஆழ்ந்த அமைதியில் இருந்தேன்.. அப்போது ஒரு குரல் கணீரென எனது காதுகளை தீண்டியது...
நான் கொஞ்சம் திரும்பி பார்த்தேன்.. ஆம் அது நீங்கள் நினைப்பது போல சாதாரண நண்பன் இல்லை.. ஒரு சிறப்பு மிக்க நண்பன் அவன்.. அவன் எமன்... என்ன என்று அவனிடம் திரும்பி கேட்டேன்.. இன்று இரவு நடுநிசியில் பயணத்திற்கு தயாராக காத்திரு என்றான்..
நான் அவனிடம் சிரித்து விட்டு கேட்டேன்.. ஏன் இந்த முன்னறிவிப்பு எனக்கு மட்டும் என்றேன்.. ஏன் என்றால் நீதான் என்னை உளப்பூர்வமாக நேசிக்கிறாய் கள்ளம் கபடம் இல்லாமல்.. அதனால் தான் என்றான்.. எனக்கு பலத்த சிரிப்பு.. என்னால் சிரிப்பை அடக்க முடியாமல் தொடர்ந்து சிரிப்பதை பார்த்து கேட்கிறான்.. எனக்கு இந்த சலுகையே தேவையில்லை.. ஏனெனில் நீ திடீரென வந்து நின்றாலும் உன்னோடு புறப்பட்டு வந்து விடுவேன்..சிறு சலனமும் இல்லாமல்.... என்றேன்..
அது சரிதான் என்று புன்னகைத்தவனிடம் சற்று நீ வரும் போது அவகாசம் தேவை என்றேன்.. எதற்காக அவகாசம்..பார்த்தாயா நீயும் சராசரி தான் என்றான் சிரித்தபடியே.. அப்படி இல்லை அப்போது ஒரு தேநீர் சூடாக நீயும் நானும் நிதானமாக ரசித்து பருகி விட்டு இந்த பிரபஞ்சத்திற்கு விடை கொடுப்போமே.. அதற்கு தான் அந்த அவகாசம் என்றேன்.. அப்படியே ஆகட்டும் என்றான் கண்களில் நேசத்தோடே...
எமனின் தொடர் பயணத்தில் கலந்து கொண்டு என்னோடு பயம் இல்லாமல் பயணிக்க காத்திருங்கள் வாசகர்களே..👣💫😊👣.
#இளையவேணிகிருஷ்ணா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக