ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

ஞாயிறு, 11 ஜூன், 2023

சம்சார தாபத்தில் இருந்து வெளியே வர

 

அன்பர்களே வணக்கம்.

        நாம் அனைவரும் சம்சார பந்தத்தில் சிக்கி தவிக்கிறோம். சம்சார சாகரத்தில் நாமாக நீந்தி கரையேற முடியுமா என்றால் முடியாது. ஏனெனில் சாதாரண சாகரத்தை போல அல்ல அது.அது மிகப்பெரிய சாகரம். இதில் இருந்து வெளியேறவே ஆத்ம ஞானிகள் முயலுவர்.ஆனால் அது புதைகுழிப்போல நம்மை உள்ளே இழுக்கும். நாம் நாமாக முயற்சி செய்தால் மீண்டும் கூட கொஞ்சம் உள்ளே சென்று மாட்டிக்கொள்வோம்.

      இதற்கு என்ன தான் வழி என்கிறீர்களா ?.நாம் நம் அகங்காரத்தை விட்டு விட்டு இறைவன் திருவடியை நன்றாக பிடித்துக்கொள்ள வேண்டும். பெற்ற தாயிற்கு பிள்ளை மேல் பாசம் இருப்பதைப்போல இறைவன் இப்போதாவது தனது அகங்காரத்தை விட்டு விட்டு தன்னிடம் வந்தானே என்று ஆனந்தம் கொள்வார்.

    இது எப்படி இருக்கும் தெரியுமா ?ஒரு தாய் தனது குழந்தையை நீண்ட நாட்களாக பிரிந்து தவிக்கும் போது திடீரென ஒருநாள் அவள் எதிரில் வந்து நின்றால் அவள் எவ்வாறு அகம் மகிழ்வாளோ அதைவிட பல்லாயிரம் மடங்கு ஆனந்தம் கொள்வார் எம்பெருமான்.

      ஆனந்த கண்ணீரோடு அணைத்துக்கொள்வார்.பிறகு இந்த பக்தன் தன்னை சம்சார சாகரத்தில் இருந்து மீட்டு எடுங்கள். எனக்கு வழி தெரியவில்லை என்று கண்ணீர் வடிப்பான்.அவரோ நீ எப்போது என் திருவடியை சரணடைந்தாயோ அப்போதே உனது பாவங்களை முழங்கால் அளவு வற்றடித்து விட்டேன். மீதமுள்ள பாவமும் எனது கருணையினால் கரையும் என்பார்.இருவரும் ஆனந்த கண்ணீர் வடிப்பார்கள்.

   சரி திருப்பதி பெருமாள் ஒரு கையை தனது முழங்காலை நோக்கியும் இன்னொரு கையை தனது திருவடி நோக்கியும் வைத்திருப்பார் அல்லவா.அதன் தத்துவம் இதுதான். என்னை சரணடைந்தவர்களுக்கு நான் சம்சாரத்தின் அல்லல்களை முழங்கால் அளவு வற்ற செய்வேன் என்பது தான்.

     இப்போது பாருங்கள். பெருமாளை இதனை ஆமோதித்து உங்களை பார்த்து புன்னகைப்பார்.☺️☺️☺️

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பெரும் போரின் உக்கிரத்தை தணித்து...

 நீயோ குருட்டு பிடிவாதத்தால் எவரின் தூண்டுதலாலோ விலகி விலகி பயணிக்கிறாய்  என்னிடம் இருந்து... அந்த உக்ரைனை போல... நானோ உன்னை  என் பேரன்பின் ...