ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வியாழன், 8 ஜூன், 2023

வரம் எனக்கு...

 


யாரோடும் பேசாத

தனிமை...

இளவேனிற் காலத்தில் என்னை 

தீண்டும் தென்றல் ...

கடற்கரையில் 

நான் மட்டுமே இருந்து 

அலை எனது காலை தீண்டி செல்லும்

காதல்...

எந்த நேரத்திலும் நம்மை விட்டு 

விலகி செல்லும்

உறவுகளை பார்த்து

ஒரு சலனமில்லாத புன்னகை...

இவை எல்லாம் ரசிக்க

ஆழ்ந்து நேசிக்கும்

மனம்....

இது தான் தற்போதைய வரம்

எனக்கு...

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நீள் இரவின் கொடுமை...

  நீ பிரிந்து சென்ற  ஒவ்வொரு நாளின்  இரவையும்  கடந்து செல்வது  அவ்வளவு எளிதல்ல  எனக்கு... அது நரகத்தின் வேதனையை  எனக்கு தந்து  அந்த காயத்தில...