ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வெள்ளி, 19 ஜனவரி, 2024

எனக்கு இயல்பென இருப்பது....


 சாதாரணமாக வாழ

உனக்கென்ன கஷ்டம்

என்று என்னை சூழ்ந்துக் கொண்டு 

கேட்கிறார்கள்...

எனக்கு அசாதாரணத்தை தவிர 

வேறு எப்படியும்

வாழ தெரியாது என்கிறேன் நான்..

இங்கே எனக்கு இயல்பென

இருப்பது அவர்களுக்கு

இயல்பில்லை...

இங்கே ஒரே நிகழ்வு

பல பேருக்கு பல வகைகளில் காட்சி

தருவது யாருடைய பிழை?

பதில் இங்கே வெறும் 

ஆழ்ந்த அமைதி மட்டுமே...

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நீள் இரவின் கொடுமை...

  நீ பிரிந்து சென்ற  ஒவ்வொரு நாளின்  இரவையும்  கடந்து செல்வது  அவ்வளவு எளிதல்ல  எனக்கு... அது நரகத்தின் வேதனையை  எனக்கு தந்து  அந்த காயத்தில...