ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

திங்கள், 15 ஜனவரி, 2024

இரவு கவிதை 🍁

 


இங்கே தேவை

ஒரு இளைப்பாறுதல்!

அதை விட தேவை

கொஞ்சம் தனிமையோடு

கனிந்து களித்திருத்தல்...

எப்போதும்

ஒரு ஊடலும் இல்லாத 

ஒரு ஜென் நிலையில் 

சுகித்திருத்தலே

என் வாழ்வின் அடையாளம்...

இதைத் தவிர வேறு எந்த வித

தேவையோ சலசலப்போ

இல்லாத நதியின் பயணமிது

என் வாழ்வின் ஒரு பெரும் பயணமான

துயரமற்ற பயணமது....

#இரவு கவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நீள் இரவின் கொடுமை...

  நீ பிரிந்து சென்ற  ஒவ்வொரு நாளின்  இரவையும்  கடந்து செல்வது  அவ்வளவு எளிதல்ல  எனக்கு... அது நரகத்தின் வேதனையை  எனக்கு தந்து  அந்த காயத்தில...