ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வியாழன், 3 ஆகஸ்ட், 2023

அந்த சாம்பல் நிற மேகம் யூகித்து இருக்கக் கூடும் ☁️

 

நான் தேடிக் கொண்டு இருக்கும் 

பேரமைதியை

இதோ இந்த மழையில் நனையும் 

தருணம்

தந்து விடுகிறது...

இங்கே என்னை சுற்றி நடக்கும் 

புற சூழலை மறந்து 

மழையில் நனையும்

இந்த தருணத்தை

நானும் என் மனதும்

கொண்டாடி தீர்க்கிறோம்...

சச்சரவுகளையே பார்த்து பார்த்து 

அலுத்து விட்ட மனதிற்கு இதமான 

இந்த சூழல் தேவை தான் என்று

அந்த சாம்பல் நிற மேகமும்

யூகித்து இருக்கக் கூடும்...

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

நேரம் இரவு 8:23.

03/08/2023.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அந்த வெறுமையோடு கூடிய பயணத்தில் ஒரு துணையாக...

அந்த வெறுமையோடு கூடிய  பயணத்தை  நான் பயணித்துக் கொண்டு  இருக்கிறேன்... ஒரு ஆழ்ந்த அமைதியும் என்னோடு  சத்தம் இல்லாமல் பயணிக்கிறது... நான் அந்...