ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2023

இனிது இனிது ஏகாந்தம் இனிது ❤️

 


ஒரு நாளோ யுகமோ எதுவாக இருந்தாலும் நிச்சயமாக தனியாக இருந்தால் நமக்கு பிடித்த விசயங்களை மிகவும் ரசித்து செய்ய இயலும்..அதை விட நாள் முழுவதும் உற்சாகமாக இருப்போம்...

இனிது இனிது தனிமை இனிது ❤️.

ஏனெனில் அங்கே காயப்படுத்தவோ சஞ்சலப்படுத்தவோ ஆள் இல்லை ...

இசையை கேட்கலாம் நல்ல புத்தகங்கள் வாசிக்கலாம்.. உறக்கம் கண்களை தழுவும் போது மணிக்கணக்கில் உறங்கி விடலாம்...

தேநீர் ஒரு புத்தகத்தை வாசித்து கொண்டோ அல்லது இயற்கையை வேடிக்கை பார்த்துக் கொண்டோ அணு அணுவாக ரசித்து பருகலாம்..

இரவெனும் பெருவெளியை மிகவும் மிகவும் நிம்மதியாக ஆனந்தமாக விண்ணில் உள்ள விண்மீன்களை நிலவை ரசித்து கொண்டு உறங்கலாம்..

எப்போதும் ஆனந்தமாக இருக்க ஏகாந்தம் தான் மிகவும் மிகவும் உறுதுணையாக இருக்கும்...

#இனிதுஇனிதுதனிமைஇனிது. ✨❤️✨.

#இளையவேணிகிருஷ்ணா.

நேரம் மாலை:6:30.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாலையோர புழுதியில் நனைந்த ஓவியம்...

 அந்த பிரமாண்டமான வீட்டில்  வாழ்ந்து கொண்டு  இருப்பவர் சில நாட்களில்  உற்சாகம் இழந்து  அவர் தாம் பார்த்து பார்த்து கட்டிய  அந்த வீட்டில்  உள...