ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

திங்கள், 14 ஆகஸ்ட், 2023

எனது சுதந்திர தின நாளின் தொடக்கம்

 


இன்று எட்டு மணியளவில் தொலைக்காட்சியில் பாகவத உபன்யாசம் கேட்பதற்காக திருப்பதி தேவஸ்தான சேனலை மாற்றினேன்.. அது ஒரு தொடர் நேரலை நிகழ்ச்சி.. தினமும் காலையில் எட்டு மணிக்கு ஆடிமாத புருஷோத்தம மாதமாக கொண்டாடும் போது பாகவதம் உபன்யாசம் கேட்பது சிறப்பு.. அப்போது எனது கணவர் செய்தி சேனலை ஒரு பத்து நிமிடம் வை இளையவேணி என்றார்.. சரி என்று சேனலை மாற்றினேன்.. அப்போது தீவிரமாக நமது நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சுதந்திர தின உரையாற்றிக் கொண்டு இருந்தார்.. நான் ஒரு நிமிடம் அவரது பேச்சை கேட்டு விட்டு இவர் குரலை கேட்டாலோ இவர் பேசுவதை கேட்டாலோ இதய துடிப்பு அதிகமாகி எனக்கு இரத்த கொதிப்பு வந்து விடுகிறது என்றேன்..உடனே எனது கணவர் அப்படியா இளையவேணி..நீ பேசும் போது மட்டும் இரத்த கொதிப்பு வராதா என்றார் சிரித்துக் கொண்டே.. நான் வானொலியில் பேசும் போது இரத்த கொதிப்பு வந்ததாக எவரும் பதிவு செய்யவில்லை என்றேன் மிகவும் நிதானமாக.. அது வானொலியில் நேரில் உன்னோடு பேசினால் நிச்சயமாக இரத்த கொதிப்பு வந்து விடும் என்றார்... எனக்கு வந்த கோபத்தினை நான் கட்டுப்படுத்திக் கொண்டு எனது பணிகளை பார்க்க அங்கிருந்து நகர்ந்து விட்டேன்... என்ன இந்த உலகம் உண்மையை சொன்னால் நம்ப மறுக்கிறது? இல்லை எனக்கு மட்டும் தான் பிரதமர் பேசும் போது கேட்க முடியாமல் நகர்ந்து விடுகிறேனா என்று எனக்கு நானே கேட்டுக் கொள்கிறேன்...😌

#எனதுசுதந்திரதினநாளின்தொடக்கம்.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அந்த ஒற்றை மனிதனின் நடமாட்டமும் இல்லாமல்...

  அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில்  என் மனமும் சேர...