எந்த ஆராவாரமும்
இல்லாத
இந்த சூட்சம
அமைதிக் கொண்ட
இரவை உறங்கி வீணாக்க விரும்பாமல்
விழித்து இருக்கிறேன்...
இந்த சூழலை நேசித்து கிடக்க காரணம்
வெயில் நனைத்த பகல் பொழுதில் மனிதர்கள் சஞ்சாரம் மிகுந்த வெளியில்
போட்டி பொறாமைகள்..
ஒருவரையொருவர் சந்தேகத்துடனேயே பார்க்கும் பார்வை...
புறம் பேசி ஒரு மனிதனின் மதிப்பிழக்க செய்து மகிழ்வது..
இப்படி எத்தனையோ அழுக்குகளை
இந்த சூட்சம அமைதிக் கொண்ட இரவு தான்
எந்த தொந்தரவும் இல்லாத
இந்த நேரத்தில் தான்
தனது பேரமைதியால்
சுத்தம் செய்து பகலுக்கு தாரை வார்த்து கொடுக்கிறது...
எந்தவித சச்சரவும் இல்லாமல் பகல் அதை சுவீகரிக்கிறது...
மீண்டும் பகல் பொழுது
மனிதர்கள் சஞ்சாரத்தில்
அழுக்காகி முடிவில்
இவரிடம் தாரை வார்க்கிறது...
ஒரு வித நெருடலோடே..
இந்த பயணத்தின் ஓட்டத்தை
காலம் ஆழ்ந்த அமைதியோடு வெறும் சாட்சியாக சத்தம் இல்லாமல்
வேடிக்கை பார்க்கிறது...
#பகலும்இரவும்
#களைப்பில்லாதபயணமும்.
#இரவுகவிதை.
#இளையவேணிகிருஷ்ணா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக