ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

புதன், 23 ஆகஸ்ட், 2023

இன்றைய தலையங்கம்

 


#இன்றைய #தலையங்கம்:-

ஒரு பக்கம் விஞ்ஞானத்தை நினைத்து பெருமைக் கொள்கிறோம்... இன்னொரு பக்கம் பூமியில் நாம் இது வரை மற்றும் இப்போது செய்துக் கொண்டு இருக்கும் செயல்களால் இயற்கை மிகவும் மோசமாக மாறுபாடு அடைந்து உள்ளதை நினைத்து கவலையடைகிறோம்... எந்த வருடமும் இல்லாத அளவுக்கு இந்த வருடத்தில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் சூரிய பகவான் நமக்கு ஒவ்வொருவர் அருகிலும் மிதந்து பொசுக்கி விடுவேன் என்று தனது ஒளி கிரணங்களால் மிரட்டிக் கொண்டு இருக்கிறார்.. எப்போதும் எல்லா சீதோஷ்ண நிலையும் ஒரே சீராக இருக்கும் நமது நாடு தற்போது திடீரென ஒரே இடத்தில் அதிக மழையை பொழிந்து எதுவுமே நடக்காதது போல ஓய்ந்து விடுகிறது..போன வாரத்தில் சென்னையில் இரவு முழுவதும் கடுமையான பேய் மழை பொழிந்ததாக எனது சகோதரி வசிக்கும் இடத்தில் இருந்து சொல்கிறார்.. என்ன தான் இயற்கையின் செயல்பாட்டில் நடக்கிறது என்று எவராலும் யூகிக்க முடியவில்லை... இந்த நிலையை முக்கியமாக உலக நாடுகள் ஒரு சீரான கால இடைவெளியில் விவாதிக்க வேண்டும்.. ஏனெனில் இயற்கை சமன்பாடு இல்லாமல் போக போக நாம் இந்த பூமியில் உயிர் வாழும் தகுதியை கொஞ்சம் கொஞ்சமாக இழந்துக் கொண்டு இருக்கிறோம் என்று சாதாரண மக்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் மிகுந்த வேதனையும் கவலையையும் தெரிவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.. இங்கிலாந்தில் தண்ணீர் பிரச்சினை எப்போதும் இல்லாத அளவுக்கு வர போகிறது என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.. இப்படி மிகவும் முக்கியமான விசயத்தில் எல்லாம் கண்டும் காணாதது போல உலக நாடுகள் வெறும் பொருளாதாரம் மட்டுமே நினைவில் வைத்து பயணித்தால் நிச்சயமாக இந்த பிரபஞ்சத்தின் அழிவுக்கு உலக நாடுகளை ஆளும் தலைவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்..இதோ இப்போது சந்திராயான்-3 வெற்றியை கொண்டாடிக் கொண்டு இருக்கும் இந்த தருணத்தில் இந்த தலையங்கத்தை எழுதிக் கொண்டு இருக்கும் என்னை காற்றின் சிறு தீண்டலும் இல்லாமல் வெறும் கொதிப்பை இயற்கை எனக்கு பரிசளித்துக் கொண்டு உள்ளது... இப்போது இதை பற்றி எழுதா விட்டால் எப்போதும் கவனத்தில் இருக்காது...

இயற்கையோடு வாழ்ந்த பசுமை மாறாத வாழ்ந்த அந்த நாட்களின் நினைவுகளை அசைப் போட்ட படி விண்ணை பார்க்கிறேன் ... சந்திரயான் நிலவில் எங்கே தரை இறங்கி இருக்கக் கூடும் என்று அல்ல.. இந்த வாயு பகவான் எங்கே இந்த விண்ணில் ஒளிந்து கொண்டார் என்று...

#இன்றையதலையங்கம்.

#விஞ்ஞானமும்வாழ்வும்.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அந்த ஒற்றை மனிதனின் நடமாட்டமும் இல்லாமல்...

  அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில்  என் மனமும் சேர...