அன்பர்களே வணக்கம்.
இன்று நாம் பார்க்க போவது மன அழுத்தம். என்ன அன்பர்களே உங்கள் மன அழுத்தம் ஞாபகம் வருகிறதா?இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மன அழுத்தம்.
இந்த மன அழுத்தம் ஏன் ஏற்படுகிறது என்று பார்த்தால் நாம் முயற்சி செய்யும் ஒரு விசயம் தோல்வி அடையும் போது அல்லது வாழ்க்கையில் நாம் இன்னும் நிறைவு பெறவில்லை என்கிற போது அல்லது தனிமையில் அதிக நேரம் இருக்கும் போது அல்லது நம்மை நாமே நம்பாமல் இருக்கும் போது இப்படி.
குழந்தைகளுக்கு மதிப்பெண் குறைவாக வாங்கும் போது அல்லது ஒப்பீடு செய்யும் போது அல்லது பெற்றோர்கள் குறைகூறிக்கொண்டே இருக்கும் போது இப்படி.
இன்னும் எத்தனையோ இருக்கிறது.
சரி நாம் முதலில் என்ன நடக்கிறதோ அதை ஏற்றுக்கொள்ள பழக வேண்டும். மனதில் எப்போதும் எதையாவது நினைத்து கொண்டே இருக்கக்கூடாது. மேலும் மனதில் ஒன்று போனால் ஒன்று விருப்பங்களை போட்டு கொண்டே இருக்கக்கூடாது.
நமது வாழ்க்கையில் நடப்பதை தள்ளி நின்று வேடிக்கை பார்க்க பழகிக்கொள்ள வேண்டும். தோல்விகள் வரத்தான் செய்யும். அதிலேயே மூழ்காமல் தூக்கி போட்டு விட்டு அடுத்தது என்ன அடுத்தது என்ன என்று போய்க்கொண்டே இருக்க வேண்டும். எங்கேயும் தேங்கி விடக்கூடாது. தேங்கினாலே பிரச்சினை தான்.
எதையும் எளிதாக எடுத்து கொள்ள பழக வேண்டும். உங்கள் குறிக்கோள் இப்போது நிறைவேறவில்லை.அவ்வளவு தான். அதற்காக எப்போதும் இல்லை என்ற அர்த்தம் இல்லை.
உங்களை பற்றி யார் என்ன சொன்னாலும் கண்டுக்கொள்ளாதீர்கள்.என்ன அவதூறு பேசினாலும் .உங்களுக்கு உள்ள நேரம் மிகவும் குறைவு. அதை உங்களுக்காக உங்கள் முன்னேற்றத்திற்காக செலவிடுங்கள். முன்னேற்றத்தைவிட உங்கள் ஆத்ம திருப்திக்காக செயல்படுங்கள்.
ஆத்ம திருப்தி உள்ள வேலையே உங்களை சலிப்படைய செய்யாது.அதில் நீங்கள் நினைக்கும் அளவுக்கு அங்கீகாரம் கிடைக்காமல் இருந்தாலும் கவலைக்கொள்ள மாட்டீர்கள்.
சம்பாதிப்பது மட்டும் தான் வாழ்க்கையில் முன்னேற்றம் என்று எந்த முட்டாள் வகுத்தது.நமக்கு பிரியமான வேலையே நமக்கு எப்போதும் சந்தோஷத்தை கொடுக்கும். நமது ஆத்மதிருப்தியை இழந்து எதை சம்பாதித்தாலும் நாம் வாழ்க்கையை தொலைத்தவர்களே.
உங்கள் வாழ்க்கை அடிப்படை தேவைக்கு போக மீதி நேரத்தை உங்களுக்கு மகிழ்ச்சி தரும் வேலையில் செலுத்தினீர்கள் என்றால் வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும்.
என்ன நான் சொல்வது சரிதானே அன்பர்களே!💐💐💐💐💐
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக