ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

ஞாயிறு, 11 ஜூன், 2023

அடமானம்

 

அன்பர்களே வணக்கம்.

            இன்றைய வாழ்க்கையில் அடமானம் என்பது எல்லோருடைய வாழ்விலும் ஏறக்குறைய நடந்து விடுகிறது. ஒரு ஏழை தனது வயிற்று பிழைப்பிற்காக தன்னிடம் உள்ள ஏதோவொன்றை அடமானம் வைக்கிறார்.ஒரு பணக்காரன் தனது ஆசையை பூர்த்தி செய்துக்கொள்ள தனது பொருளை அடமானம் வைக்கிறார்.அடமானம் என்பது ஏதோவொரு வகையில் அனைவர் வாழ்விலும் நிகழ்ந்து விடுகிறது. 

     சரி.அந்த அடமானத்தை நாம் விவாதப்பொருள் தற்போது ஆக்கவேண்டாம்.விட்டு விடலாம். நான் கூற வந்தது வேறு ஒரு அடமானம். என்ன புரியவில்லையா?புரிந்துக்கொள்வீர்கள் இந்த பதிவின் மூலம்.

      இன்றைய இளைஞர்கள் மிகுந்த உணர்வுப்பூர்வமாகவே அனைத்தையும் மேற்கொள்கிறார்கள்.ஒரு பெண்ணை காதலிப்பது குற்றம் இல்லை. காதலித்த பெண் கிடைக்கவில்லை என்பதற்காக தற்கொலை செய்து கொள்வது தன்னையே துன்புறுத்தி கொள்வது பைத்தியம் பிடித்தது போல் அவள் நினைவாகவே இருப்பது இவை எல்லாம் மிகவும் வேடிக்கையாக இல்லையா?நீங்கள் இந்த விசயத்தில் உங்கள் வாழ்க்கையை அந்த பெண்ணிடம் அடமானம் வைத்து விட்டீர்கள் என்று தானே அர்த்தம்?

       உங்களுக்கு அந்த பெண்தான் என்றால் திருமணம் நடக்க போகிறது. இதற்கு ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம்?உண்மையிலேயே சொல்லுங்கள். வாழ்க்கையில் நீங்கள் மிகவும் நேசித்தவர் இந்த உலகை விட்டு சென்று விட்டார் என்று வைத்துக்கொள்வோம்.நீங்கள் அவருக்காகவே வாழ்வை தியாகம் செய்வீர்களா?அப்படி செய்தால் அதைவிட முட்டாள்தனம் வேறு என்ன இருக்க முடியும்? 

     நீங்கள் ஏதோவொரு நிகழ்ச்சியை சாதிக்க இந்த பூமிக்கு வந்திருக்கிறீர்கள்.இடையில் காதல் என்பதையும் ஒரு நிகழ்வாக கடந்து போக வேண்டுமே ஒழிய அதை பிடித்து தொங்கி கொண்டு உங்கள் வாழ்க்கையை வீணடிக்கக்கூடாது.உங்களுக்கு என்று எது உள்ளதோ அது உங்களை கேட்காமலே உங்களை வந்தடையும்.

        காதலையும் கடந்து விடுங்கள். உற்சாகமாக இருங்கள். உங்கள் வாழ்க்கையை தேவையில்லாமல் ஒரு பெண்ணிடம் அடமானம் வைக்காதீர்கள். இன்னும் எவ்வளவோ விசயம் இருக்கிறது இந்த பூமியில் நீங்கள் சாதிக்க. அதை விட்டு விட்டு அற்பத்தனமாக நடந்து கொள்ளாதீர்கள்.

     எதற்காகவும் உங்கள் வாழ்க்கை அடமானம் வைக்காமல் நீங்கள் நீங்களாக இருந்து உங்கள் அனுபவங்களை இந்த பூமியில் தூவி செல்லுங்கள். அது நீங்கள் யார் என்று இந்த உலகத்திற்கு அடையாளப்படுத்தும்.

       பந்தப்பாசத்தில் வாழ்க்கையை அடமானம் வைத்து விட்டால் அதை உங்களால் மீட்கவே முடியாது. குடும்பத்தில் தேவையாவர்களுக்கு தேவையானதை பற்று இல்லாமல் எந்தவித பிரதிபலனும் இல்லாமல் செய்தால் தான் உங்கள் வாழ்க்கை அடமானத்திலிருந்து தப்பிக்கும்.

   என்ன அன்பர்களே அடமானம் இல்லாத வாழ்க்கை ஆனந்தம் தானே?முயற்சி செய்யுங்கள். உங்களால் முடியும்.💐💐💐💐💐.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இரவு சிந்தனை ✨

  அதீத உள் தேடல்,  உங்களை நீங்களே நேசித்தல்,  எதுவாக இருந்தாலும்  பார்த்துக் கொள்ளலாம்  இங்கே இழப்பதற்கு  நம்மிடம் எதுவும் இல்லை என்கின்ற தி...