பக்கங்கள்

வெள்ளி, 30 ஜூன், 2023

நானும் அந்த பறவையும்..


 காலணி இல்லாமல்

அந்த நண்பகல் வேளையில்

நான் திக்கு தெரியாத திசையில்

நடக்கிறேன்!

அந்த பறவை அதேவேளையில்

திக்கு தெரியாத திசையில்

வானில் பறக்கிறது!

இருவரின் இலக்கும்

எதுவென்று இந்த பிரபஞ்சம்

அறிந்து கொண்டு இருந்தால் 

போதும் 

என்று

நாங்கள் நினைக்கிறோம் !

வானமோ பூமியோ அதை பற்றி

கவலையில்லாமல் 

எங்களை வழி நடத்துகிறது

சூட்சமமாக!

#இளையவேணிகிருஷ்ணா.

விட்டு விலகி விட தோன்றாத இந்த இரவு


 ஒன்றும் எழுத வேண்டாம்!

ஒன்றும் நினைக்க வேண்டாம்!

எந்த ஒன்றினோடும் பிணைக்காமல்

எந்த மனிதரின் உணர்வுக்கும் 

பிணைக் கைதியாகாமல்

பயணிக்கும் இந்த இரவின்

தனித் தன்மை தான் 

கொஞ்சம் ஆறுதலாக

ஒட்டியும் ஒட்டாமல் என்னோடு

பயணிக்கும் இந்த தருணத்தை மட்டும்

விட்டு விலகி விட மனமில்லை எனக்கு!

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

அந்த வெற்றுக் கூச்சலிடம் மட்டும்..

 


ஏதோவொன்று என்னை

என்னையும் அறியாமல்

பயணிக்க வைக்கிறது!

அந்த வெற்றுக் கூச்சலிடம்

மட்டும் என்னை விட்டு விட்டு

நீ விலகி சென்று விடாதே என்று

அந்த ஏதோவொன்றிடம்

கெஞ்சி கூத்தாடுவதை பார்த்து

காலமே என் மீது பரிதாபமாக

பார்த்தது!

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

வியாழன், 29 ஜூன், 2023

ஆளுநர் அரசியல்

 


இன்றைய தலையங்கம்:-

ஆளுநர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி இருக்கிறார்.. இதில் ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று பல அரசியல் கட்சிகளும் விமர்சித்து வருகிறார்கள்... ஆனால் ஒரு விசயத்தை இங்கே நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.. தமக்கு அதிகாரம் இல்லை என்று நன்றாக ஆளுநருக்கும் தெரியும்.. இதன் மூலம் ஆளும் அரசிற்கு ஒரு தர்ம சங்கடமான நிலையை தோற்றுவிக்க வேண்டும் என்பதே அவரது நோக்கம்... அதாவது இவர்கள் சட்ட ரீதியாக அணுகும் போது மக்களிடையே பெரும் அவப்பெயர் ஏற்பட வேண்டும் என்பதே அவரது நோக்கம்.. இதற்கு இடம் கொடுக்காமல் முதலமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து விடுவித்து சட்ட ரீதியாக அவருக்கு உதவி இருக்கலாம்.. அல்லது செந்தில் பாலாஜியே பதவியை ராஜினாமா செய்து விட்டு வழக்கை சந்தித்து விடுதலையாகி அமைச்சர் அரசியல் பயணத்தை தொடரலாம்.. எப்படி பார்த்தாலும் இது ஆளும் அரசாங்கத்தை தர்ம சங்கட நிலையில் வைத்திருக்கவே இந்த ஏற்பாடு என்பது திண்ணம்..இதை புரிந்துக் கொண்டு அரசியல் செய்ய வேண்டும்.. இப்படி இருந்தால் இப்படி நடக்க நிறைய வாய்ப்பு உள்ளது அதற்கு நாம் இடம் கொடுக்கலாமா என்று ஒரு பழமையான அரசியல் கட்சி சிந்தித்து இருக்க வேண்டும் ...இது தான் அரசியல் சாணக்கியதனம்..அதை ஆளும் அரசு புரிந்துக் கொள்ளாமல் இருந்தது தான் இப்போது இந்த தர்ம சங்கட நிலை.. எப்படியோ இப்போதும் சட்ட ரீதியாக தானே அணுக போகிறார்கள்..அதை அவரை அமைச்சர் பதவியில் இருந்து விடுவித்து அணுகி இருக்கலாமே.. இதில் ஏன் இந்த ஈகோ பிரச்சினை.. இப்போதும் பிரச்சினை சிக்கல் மேல் சிக்கலாக செல்வதற்கு சமயோசிதமாக யோசிக்காதது தான் காரணம்.. இது ஆளும் அரசாங்கத்தை பலவீனப்படுத்த ஆளுநர் எடுத்த முடிவு.. இப்படி முடிவெடுக்க முடியாது என்று தெரிந்தும் முடிவெடுத்து இருக்கிறார்.. இதில் அனுதாபம் தேட முடியாது என்று நன்கு அவருக்கு தெரிந்து இருக்கிறது.. இப்போது யோசியுங்கள்.. சமயோசிதமாக யார் முடிவெடுத்து இருக்க வேண்டும் என்று??? எல்லாமே இங்கு கணக்கு தான் 🐾🤫

#செந்தில்பாலாஜிஅமைச்சர்

பதவியில் இருந்து நீக்கம்.

#இன்றையதலையங்கம்.

#இளையவேணிகிருஷ்ணா.

புதன், 28 ஜூன், 2023

கிருஷ்ணா இணையதள வானொலி

 


நேயர்களே வணக்கம் 🎻🙏🎻.

இன்று இரவு இந்திய நேரம் ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சியில் எழுத்தாளர் கவிஞர் ரூபன் ராஜசேகரன் அவர்களின் கவிதை தொகுப்போடு இனிமையான பாடல்கள் கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் ✨

இது இரவை இனிமையாகும் சுகமான இசை பயணம் 🎻

கீழேயுள்ள லிங்கில் நிகழ்ச்சி கேட்டு மகிழலாம் 🎻

https://zeno.fm/amp/radio/krishna-fma76ufetpuy8uv/

செவ்வாய், 27 ஜூன், 2023

காலை கவிதை 🦋

 

அதிகாலை நம்மை அரவணைத்துக் கொண்டு

செல்ல காத்திருக்கிறது!

நாம் உற்சாகமாக

பயணிக்கலாம் வாருங்கள்!

நேற்றைய சோகமான சுவடுகளை மறந்து!

#காலை கவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

காலத்தின் பயணத்தில்..

 

காலத்தின் பயணத்தில்

இரவும் பகலும்

ஓராயிரம் முறை வந்து வந்து

செல்கிறது!

நான் இரவின் நிசப்தத்தில்

தொலைகிறேன்!

பகலின் சலசலப்பில்

அதிர்கிறேன்!

இந்த இரண்டின் தாக்கத்தில்

நான் பயணிக்க 

நினைத்த தருணத்தை 

எங்கே தவற விட்டேன் என்று

தெரியாமல் தேடி அலைகிறேன்...

தேடலும் ஒரு பயணம் தானே

என்றது காலம்

எந்த அலட்டலும் இல்லாமல்

என்னை பார்த்து...

நான் என்ன பதில் அதற்கு சொல்ல முடியும்??

நீங்கள் தெரிந்தால் சொல்லுங்கள்!

#இரவுகவிதை...

#இளையவேணிகிருஷ்ணா.

27/06/2023.

இரவு சிந்தனை ✨

 


காலத்தின் கைகளில்

நான் என்னை ஒரு குழந்தையாக

ஒப்படைத்து விட்டேன்!

இப்போது நான் 

எந்த சுமையும் இல்லாமல் 

உற்சாகமாக

பயணிக்க முடிகிறது !

#இரவு சிந்தனை ✨

#இளையவேணிகிருஷ்ணா.

கிருஷ்ணா இணையதள வானொலி

 

நேயர்கள் அனைவருக்கும் இனிமையான வணக்கம் 🙏🎻🙏.

நேயர்களே இன்று இரவு இந்திய நேரம் ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சியில் ரூபன் ராஜசேகரன் அவர்களின் கவிதை தொகுப்போடு இனிமையான பாடல்கள் கேட்டு ரசிக்கலாம் வாருங்கள்..

இது உங்கள் கவலைகளை மறந்து பயணிக்க கிடைத்த சந்தர்ப்பம்..

இரவை இனிமையாகும் தொடர் இசை பயணமிது நேயர்களே 🎻🙏✨.

கீழேயுள்ள லிங்கில் நிகழ்ச்சி கேட்டு ரசிக்கலாம் 🎻

https://zeno.fm/amp/radio/krishna-fma76ufetpuy8uv/

திங்கள், 26 ஜூன், 2023

கிருஷ்ணா இணையதள வானொலி

 


நேயர்களே வணக்கம் 🎻🙏🎻

இன்று இரவு ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சியில் எழுத்தாளர் ரூபன் ராஜசேகரன் அவர்களின் கவிதை தொகுப்போடு இனிமையான பாடல்கள் கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் நேயர்களே 🎻✨🎉

இது இரவை இனிமையாக்கும் சுகமான பயணமிது நேயர்களே 🎻🙏🎻.

கீழேயுள்ள லிங்கில் நிகழ்ச்சி கேட்டு ரசிக்கலாம் கொஞ்சம் கவலைகளை மறந்து ✨🎉🦋🍁

https://zeno.fm/amp/radio/krishna-fma76ufetpuy8uv/

வெள்ளி, 23 ஜூன், 2023

கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ள...


கொஞ்சம் 

ஆசுவாசப்படுத்திக் கொள்ள இங்கே

உனது சிறு புன்னகையை

தவிர வேறெதுவும்

நிறைவாக இல்லை!

காலத்தின் கணக்குகளில்

இலாப நஷ்டம் பார்த்து

என்ன ஆக போகிறது?

ஆசுவாசத்தை தேடி அலையும்

மனதிற்கு உன் அருகாமை

சில நொடிகள் கூட போதும்

என்பதை நீ அறிய மறுக்கிறாய்

அதுவே எனது வாழ்வின் 

தணலாய் கொல்கிறது...

மற்ற படி காலத்தின் 

இலாப நஷ்ட கணக்கால் 

எனக்கு ஆக போவது ஒன்றுமில்லை!

#இளையவேணிகிருஷ்ணா.

24/06/2023.

குடுவை பானமும் நதியின் பிரவாகமும்

 

குடுவையில் அடைத்த பானத்திற்கு 

அதை ருசிப்பவர்களுக்காக

காத்திருப்பு அவசியம்!

இங்கே கரைபுரண்டு

ஓடும் நதிக்கு

எந்தவித காத்திருப்பும் அவசியம் இல்லை!

சுதந்திரத்தின் அலாதி சுவையை

அந்த பிரவாகம் எடுத்து ஓடும் 

நதியை தவிர யார் அறியக் கூடும்?

#இளையவேணிகிருஷ்ணா.

நான் நேசிக்கும் காதலன்

 

ஏன் இந்த தனிமை என்று

புலம்ப பிடிக்காது!

தனிமையை தவிர வேறொருவரை

காதலிக்க விருப்பம் இல்லை!

நான் என்னை மட்டுமே 

திகட்ட திகட்ட

நேசித்துக் கொண்டே

எனக்கு பிடித்த பணிகளை 

செய்துக் கொண்டே

இதோ இந்த பிறவி எனும் 

சமுத்திரத்தை

எளிதாக நீந்தி விடுவேன்

நான் எப்போதும் தனித்துவமானவள்!

என்னை யாரும் தொந்தரவு 

செய்யாதீர்கள்!

#இளையவேணிகிருஷ்ணா.

கிருஷ்ணா இணையதள வானொலி

 

நேயர்கள் அனைவருக்கும் இனிமையான வணக்கம் 🎻🙏🎻

இன்று இரவு இந்திய நேரம் ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சியில் எழுத்தாளர் ரூபன் ராஜசேகரன் அவர்களின் கவிதை தொகுப்போடு இனிமையான அவரது விருப்ப பாடல்களை கேட்டு மகிழலாம் வாருங்கள் நேயர்களே 🎻🙏🎻

கீழேயுள்ள லிங்கில் நிகழ்ச்சி கேட்டு மகிழலாம் 🎻

https://zeno.fm/amp/radio/krishna-fma76ufetpuy8uv/

வியாழன், 22 ஜூன், 2023

கிருஷ்ணா இணையதள வானொலி

 

நேயர்களே வணக்கம் 🙏🎻🙏

அனைவரும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.இன்று இரவு இந்திய நேரம் ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சியில் இணைந்துக் கொள்ளுங்கள் ✨.

இதில் எழுத்தாளர் ரூபன் ராஜசேகரன் அவர்களின் விருப்ப பாடல்களோடு அவர்களின் கவிதை தொகுப்போடு நிகழ்ச்சி ஒலிபரப்பு ஆகிறது..

கீழேயுள்ள லிங்கில் நிகழ்ச்சி கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் நேயர்களே 🎻✨🎉

https://zeno.fm/radio/krishna-fma76ufetpuy8uv/

புதன், 21 ஜூன், 2023

ருஷ்ணா இணையதள வானொலி

 

நேயர்கள் அனைவருக்கும் இனிமையான வணக்கம் 🎻🙏🎻.

இன்று இரவு இந்திய நேரம் ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சியில் எழுத்தாளர் ரூபன் ராஜசேகரன் அவர்களின் கவிதை தொகுப்போடு அவரது இனிமையான பாடல்கள் கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் நேயர்களே 🎻🙏🎻.

கீழேயுள்ள லிங்கில் நிகழ்ச்சி கேட்டு ரசிக்கலாம் 🎻

https://zeno.fm/amp/radio/krishna-fma76ufetpuy8uv/

செவ்வாய், 20 ஜூன், 2023

நான் விடை பெறும் போது...

 

நான் யார் என்று

உணரும் போது

அந்த நான் விடைபெறுகிறது!

விடை பெறும் போது

அதை பயத்தினால்

மீண்டும் அரவணைத்துக் கொள்கிறேன்...

அதனோடு சூட்சமமாக மாயையும் எனை

இறுக அணைத்துக் கொள்கிறது!

இங்கே சம்சார தாபத்தின்

தன்மையின் வாசத்தை

என்னில் இருந்து பிரிக்க

போராடும் தருணத்தின் வலியை இங்கே யார் அறியக் கூடும்?

#இசைச்சாரல்வானொலி.

#இளையவேணிகிருஷ்ணா.

பித்தரும் நானே ஞானியும் நானே

 

பிரபஞ்சத்தின் நேசத்தை

ஏந்திக் கொண்டு

சஞ்சாரம் செய்கிறேன்!

ஒரு ஞானியாக!

இங்கே என்னை வசைப்பாடுகிறார்கள்

ஒரு பித்தர் என்று!

இங்கே ஞானியும் பித்தரும்

எனக்குள் கரைந்து

பேரொளியாக வியாபித்து

அவர்களுக்கு காட்சி கொடுக்கும் போது

பறந்து நடுங்கி

ஓடி விடுகிறார்கள்

ஒரு அலறலோடு....

இப்போதும் அவர்களிடம்

என்னை பற்றி புரிதல் இல்லை எனும் போது

நான் கவலையடைகிறேன்

அவர்கள் அறியாமையை நினைத்து!

#இசைசாரல்வானொலி.

#காலைகவிதை..

#பிரபஞ்சம்.

நானே எனை நேசிக்கும் ரசிகை

 

பல பணிகளுக்கிடையே

நான் இங்கே

உட்கார்ந்து எதையோ

கிறுக்கிக் கொண்டு

இருக்கிறேன்!

என்னை கடக்கும்

மனிதர்கள்

எனை ஓர் முட்டாள்

என்கிறார்கள்!

நானோ எனை

நேசிக்கும் ரசிகையானேன்!😊

#இளையவேணிகிருஷ்ணா.

கிருஷ்ணா இணையதள வானொலி

 

வணக்கம் நேயர்களே 🙏🎻🙏.

இன்று இரவு இந்திய நேரம் ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சியில் எழுத்தாளர் ரூபன் ராஜசேகரன் அவர்களின் கவிதை தொகுப்போடு அவரது விருப்ப பாடல்களையும் கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் நேயர்களே 🙏🎻🙏.

கீழேயுள்ள லிங்கில் நிகழ்ச்சி கேட்டு மகிழலாம் 🎻

https://zeno.fm/amp/radio/krishna-fma76ufetpuy8uv/

திங்கள், 19 ஜூன், 2023

உறங்கும் முன் ஒரு சிந்தனை கதை

 


நேயர்களே வணக்கம் 🙏

உறங்கும் முன் ஒரு சிந்தனை கதை கேட்டு விட்டு உறங்கும் போது தங்களுக்கு மனம் மிகவும் இலேசாக புத்துணர்ச்சியோடு அமைதியோடு இருக்கும்.. அந்த வகையில் இன்றைய உறங்கும் முன் ஒரு சிந்தனை கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் நேயர்களே 🙏🎻🙏.

https://youtu.be/2xC9UBcyxxc

கிருஷ்ணா இணையதள வானொலி

 

நேயர்கள் அனைவருக்கும் இனிமையான வணக்கம் 🎻🙏🎻.

இன்று உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இந்திய நேரம் ஒன்பது மணிக்கு( 9:00pm) இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சியில் எழுத்தாளர் ரூபன் ராஜசேகரன் அவர்களின் கவிதை தொகுப்போடு இனிமையான அவரது விருப்ப பாடல் தேர்வுகள் கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் நேயர்களே 🎻🙏🎻.

கீழேயுள்ள லிங்கில் நிகழ்ச்சி கேட்டு மகிழலாம் 🎻

https://zeno.fm/amp/radio/krishna-fma76ufetpuy8uv/

இரவு கவிதை 🍁

 


அந்த தீவோடு 

நான் கொண்ட காதல்

அப்படி ஒன்றும் என்னை

ஏமாற்றி விடவில்லை!

கொஞ்சம் கடலில் கால் நனைக்க

அனுமதித்து இருக்கிறது!

#இளையவேணிகிருஷ்ணா.

ஞாயிறு, 18 ஜூன், 2023

பிரபஞ்சத்தின் ஒலி

 


இந்த பிரபஞ்சத்தின் 

ஒலியை இங்கே

சூட்சம சக்தி கொண்டவர்கள் 

மட்டுமே உணர முடியும்!

மற்றவர்கள் எல்லோரும்

வெளிப்புற சச்சரவுகளிலேயே

அவர்கள் காலத்தை விரயம் 

செய்கிறார்கள்!

#காலைசிந்தனை

#இளையவேணிகிருஷ்ணா.

19/06/2023.

ஊடுருவி சென்று விடு ஏக்கத்தை கலைத்து

 


ஓ மனிதா!

நீ போக

எத்தனித்து விட்டால்

அடுத்தவர்

கைகள் தடுத்தாலும்

நிற்காது உன்

பயணம்!

வரும் போதும்

தனியே!

போகும் போதும்

தனியே!

இடையில் வந்த

பந்தங்கள்

பாதி வழியே!

பிள்ளைகள்

பேருக்கு

மட்டுமே!

மனைவியோ

மகிழ்ச்சிக்கு

மட்டுமே!

உறவுகளோ

உள்ளங்கையில்

பணம்

உள்ள வரை!

சமுதாயமோ

நம் கௌரவத்தை

சாகடிக்கும் வரை!

சந்தடிசாக்கில்

நீ தொடங்கி

விட்டாய்

உன் பயணத்தை!

வைராக்கியத்தை

மட்டும் 

துணைக்கொண்டு!

இனி தடை இல்லை

மனிதா

உன் பயணத்தில்!

பறந்து செல்!

வானத்தை வசமாக்கி!

ஊடுருவி சென்று விடு

ஏக்கத்தை கலைத்து!💫💦💫👣💦👣

✍️இளையவேணிகிருஷ்ணா.

என் அகங்காரத்தை அடக்கி..

 


அன்பே!

இந்த சாகரம்

நதிகளின்

சுயத்தை

விட்டபின்பே

ஏற்றுக்கொள்கிறது!

அதுபோல நீயும்

சொல்கிறாய்!

என் சுயத்தை

தொலைக்க

என் அகங்காரம்

விடவில்லை!

நீயோ என்னை

ஏற்பதாக இல்லை!

என் அகங்காரத்தை

அடக்கி என்னை

நீ ஏற்றுக்கொள்ள

கூடாதா என்ஆருயிரே!❤️💖💙💖💜💞

✍️இளையவேணிகிருஷ்ணா.

நான் தான் இங்கிதமின்றி பயணிக்கிறேன்...

 

உலகம் எப்போதும்

உலகமாகவே தன் 

நிலைத் தடுமாறாமல் 

பயணிக்கிறது!

நான் தான் 

ஆயிரம் சஞ்சலங்களில் 

மனதை செலுத்தி 

இந்த பிரபஞ்சத்தின் 

கழிவாக பயணிக்கிறேன்

கொஞ்சமும் இங்கிதம் இல்லாமல்...

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

இரவு கவிதை 🍁

 


நான் பேரமைதி கொண்டு

பயணிக்கும் தருணத்தில் தான்

என்னை பற்றிய இத்தனை தேடல்கள்

உள்ளதா என்று வியந்து பயணிக்கிறேன்!

என்னோடு என் தேடலை மட்டும் அனுமதிக்கிறேன்!

அது என்னோடு முரண்படாதவரை!

இங்கே எதையும் சுமந்து செல்ல

நான் விரும்பவில்லை!

நான் எப்போதும்

ஒரு சுமை இல்லாத பயணி!

#இளையவேணிகிருஷ்ணா.

உறங்கும் முன் ஒரு சிந்தனை கதை

 


நேயர்களே வணக்கம் 🎻🙏🎻

உறங்கும் முன் ஒரு சிந்தனை கதையில் மீண்டும் உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்வும் ஆனந்தமும் 🙏✨🎻

இதோ கீழேயுள்ள லிங்கில் நீங்கள் உறங்கும் முன் ஒரு அழகான சிந்தனை கதையை கேட்டு விட்டு உறங்க செல்லலாம்.. அந்த கதையை பற்றிய நினைவலைகளை நீங்கள் எமது யூடியூப் தளத்தில் பகிர்ந்து கொள்ளலாம் ✨🙏✨

கீழேயுள்ள லிங்கில் கேட்டு மகிழுங்கள் நேயர்களே 🎻✨🎉

https://youtu.be/4F5DGneRyJc

சனி, 17 ஜூன், 2023

இரவு கவிதை (2)

 

தனிமையின் கரங்களில்

நான் எப்போதும் அடைக்கலம்!

காற்று வெளியிடையே

இந்த அமாவாசை இரவின் கருமையை

ரசிக்கிறேன்..

காதலோடு தென்றல் காற்றின்

ஸ்பரிசத்தை மட்டும்

என்னால் வேண்டாம் என்று

வைராக்கியமாக ஒதுக்க இயலவில்லை!

மற்ற படி காதலுக்கும் எனக்கும்

இருக்கும் தூரம் என்பது

பல கோடி மைல்கள்....

#இரவு கவிதை

#இளையவேணிகிருஷ்ணா.

இரவு கவிதை 🍁

 

உங்கள் இருப்பை பதிவு செய்ய

ஏதேனும் செய்துக் கொண்டே

இருக்கிறீர்கள்!

கொஞ்சம் வெறுமனே 

இந்த நொடியை

கடக்க விட்டு விடுங்கள்!

அது உங்களுக்கு நிச்சயமாக

ஆறுதலை தந்தே தீரும்!

ஏதேதோ எண்ணம் உங்களை

ஆக்கிரமிப்பதில் இருந்து

கொஞ்சம் வெளியே வாருங்கள்!

இந்த இரவை பேரமைதியின் 

தழுவலோடு பிணைந்து 

உங்கள் உறக்கம் நினைப்பது

ஒரு குற்றமா??

#இரவு கவிதை

#இளையவேணிகிருஷ்ணா.

வெள்ளி, 16 ஜூன், 2023

அரசியல் யாருக்கு சாதகம்?

 

இன்றைய தலையங்கம்:-

வணக்கம் நேயர்களே 🙏🎻🙏

இங்கே எமது இசைச் சாரல் வானொலி பக்கத்திற்கு பத்தாயிரம் பேர் பின்பற்றுகிறார்கள்... ஆனால் இவர்கள் வைத்து நான் அரசியலில் இறங்கினால் நான் வெற்றி பெற முடியுமா என்று கேட்டால் நிச்சயமாக முடியாது.. அது எனக்கு நன்றாக தெரியும்.. இப்படி தான் பாருங்கள் சிலபேர் சினிமைவை வைத்துக் கொண்டு அவர்கள் ரசிகர்களை வைத்துக் கொண்டு அரசியலில் வெற்றி பெறலாம் என்று நினைப்பது நிச்சயமாக அறியாமை என்று தான் சொல்ல வேண்டும்.. இங்கே தமிழ் நாட்டில் தான் இந்த மாயைக்கு பலபேர் அடிமையாகிறார்கள்.. இங்கே ஒரு துறையில் பிரகாசமாக இருந்தால் போதும் அதுவே அரசியலில் பிரகாசிக்க மிக பெரிய தகுதி என்று நினைத்து விடக்கூடாது.. இங்கே அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்.. நிச்சயமாக அரசியல் என்பது மிக பெரிய களம்.இதில் வாய்ப்பு கிடைத்து வெற்றி பெற்றவர்கள் ஏனோ பணத்தின் பின்பும் சொத்து வாங்கி குவிப்பது என்கின்ற மாயையிலும் அதிகார போதை என்று பல பேர் அந்த வித மாயையிலும் மாட்டிக் கொள்கிறார்கள்.. உண்மையில் அரசியல் என்பது மிகவும் வித்தியாசமான களம்..அதை புரிந்துக் கொள்வது இங்கே ஒரு மிக பெரிய தவம் போல தான்.. இன்றைய அரசியலில் நேர்மையாக இருந்து மக்கள் செல்வாக்கு எப்போதும் இருந்து நீடித்து பயணிப்பவர்கள் மிகவும் சொற்பம்.. ஆனால் இதையும் தாண்டி ஜோதிட ரீதியாக சனியின் செல்வாக்கு மிக்கவர்கள் தான் அரசியல்வாதிகளாக தகுதி படைத்தவர்கள்.. ஏனெனில் அவர்கள் எப்போதும் கைகளிலிலோ தனது உடையிலோ அழுக்கு படும் என்று ஒதுங்காமல் மிகவும் எளிமையான மனிதர்கள்.. மேலும் சத்தியத்தை கொடுத்த வாக்கை எப்போதும் எந்த நிலையிலும் கை விட மாட்டார்கள்.. மேலும் சூரியன் செவ்வாய் இந்த கிரகங்கள் வலுத்து தசாப்புக்தியும் ஒத்துழைத்தால் நிச்சயமாக இவர்கள் புகழோடு கூடிய நிரந்தர அரசியல்வாதி.. மேலும் இவர்கள் இறந்த பிறகும் இவர்களை பற்றி மக்கள் பேசிக் கொண்டே இருப்பார்கள்..

அதனால் அரசியல் என்கின்ற சமுத்திரத்தில் குதிப்பதற்கு முன் பல முறை யோசிக்க வேண்டும்..மீடியாவை நம்பியோ ரசிகர்களை நம்பியோ இந்த சமுத்திரத்தில் குதித்தால் உங்களுக்காகவே அங்கே மிக பெரிய முதலை காத்துக் கொண்டு இருக்கும் மிகவும் அமைதியாக உங்களை உணவாக்கிக் கொள் (ல்)ள ...

ஆகையால் தேவை நிதானம்...

#இன்றையதலையங்கம்

#திரைநட்சத்திரங்களின் #அரசியல்கனவு.

#இளையவேணிகிருஷ்ணா.

நான் அப்படி தான்


 நான் அப்படி தான் என்றால்

நீங்கள் ஒரு புன்னகையோடு 

கடந்து விடுங்கள்!

நீங்கள் ஏன் அப்படி என்று 

கேட்டீர்கள் என்றால் நான் 

விளக்கம் கொடுத்து

அது உங்களுக்கு

பைத்தியம் பிடித்து விடும்!

இப்போது புரிகிறதா நான்

ஏன் தனித்துவமாக 

இருக்கிறேன் என்று!

#இளையவேணிகிருஷ்ணா.

இரவு கவிதை 🍁

 


அத்தனை சச்சரவுகளும்
ஒரு வழியாக முடிந்து விட்டது!
அங்கே நான் தேடும் பேரமைதி கேட்பாரற்று கலங்கி இருக்க!
நான் அதை இழுத்து
அணைத்துக் கொண்டேன்
மிகுந்த காதலோடு !
நான் தேடிய பொக்கிஷம்
நீயல்லவா என்று!
#இரவு கவிதை 🦋
#இளையவேணிகிருஷ்ணா.

கிருஷ்ணா இணையதள வானொலி

 

நேயர்கள் அனைவருக்கும் இனிமையான வணக்கம் 🙏🎻🙏

இன்று இரவு இந்திய நேரம் ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சியில் இன்று படைப்பாளி ராஜீ சென்னை அவர்களின் கவிதை தொகுப்போடு அவரது விருப்ப தேர்வான பாடல்களையும் கேட்டு மகிழலாம் 🎻🤝✨🎻

இது இசையோடு ஒரு நெடுந்தூர பயணம் நேயர்களே 🙏🎻🙏

கீழேயுள்ள லிங்கில் நிகழ்ச்சி கேட்டு ரசிக்கலாம் 🎻


https://zeno.fm/amp/radio/krishna-fma76ufetpuy8uv/

வியாழன், 15 ஜூன், 2023

அவளோடு ஒரு பயணம்

 

அவளோடு ஓர் பயணம்:-

அங்கே அலுவலகத்தில் அவ்வளவு களேபரங்கள் நடந்து முடிந்து இருக்கிறது.. இங்கே நீ நிலவை ரசித்து அதில் காதல் மொழியை பேசி வீடியோ போட்டு கொண்டு இருக்கிறாயா? அதுவும் காதலில் அவ்வளவு பிடிப்பு இல்லாத நீ இப்படி உருகும் காதல் மொழி பேசி அப் லோட் செய்வது தான் ஆச்சரியம் என்று கேட்டுக் கொண்டே எனது வீட்டில் நுழைகிறான் கிருஷ். 

நான் சமையலறையில் தோசை வார்த்துக் கொண்டே அவன் வருகையை ஆச்சரியமாக பார்த்து வரவேற்றேன்.. புன்முறுவலோடு..

என்ன கிருஷ்.. இந்த பக்கம் காலையிலேயே என்றேன்.. சிரித்தபடியே..

ஆம்..நீ அந்த நிகழ்வை அவ்வளவு எளிதாக கடந்து விடுவாய் என்று நான் நினைக்கவில்லை.. அதனால் தான் காலையிலேயே இங்கே வந்தேன்.. என்றான்.

ஓ.. அந்தளவுக்கு நீ என் மீது அக்கறை செலுத்த ஆரம்பித்து விட்டாயா என்றேன் கேலியாக..

சரி வா...தோசை சாப்பிடலாம் என்றேன்..

இல்லை நதி.. வீட்டில் அம்மாவிடம் உடனே வந்து விடுவேன் என்று சொல்லி விட்டு வந்தேன்.. என்றான்..

அட பரவாயில்லை.. சாப்பிட்டு விட்டு போ.. நானும் அலுவலகத்திற்கு தான் தயாராகிறேன் என்று சொல்லி கொண்டே அவனிடம் இரண்டு தோசை மற்றும் பூண்டு சட்னியை ஒரு தட்டில் போட்டு கொண்டு போய் கொடுத்தேன்..

அவனும் அதை மிகவும் நிதானமாக ரசித்து சாப்பிட்டு கொண்டே எப்படி இவ்வளவு இலகுவாக எதையும் எடுத்து கொள்கிறாய் என்றான்...

என்ன இந்த தோசை வார்த்தது பற்றியா சொல்கிறாய் என்றேன் சிரித்துக்கொண்டே..

இல்லை நதி... அலுவலகத்தில் உனக்கு எதிராக அவ்வளவு விசயங்கள் நடந்ததை பற்றி என்றான்...

அப்படி இல்லை கிருஷ்.. இங்கே பல நிகழ்வுகள் நமக்கு எதிராக நடக்கலாம்.. அதெல்லாம் உண்மையாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.. மேலும் நம்மை பற்றி எத்தனையோ விசயங்கள் எவர் எவரோ சொல்லலாம்..அதை பற்றி எல்லாம் மனதின் ஆழம் வரை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.. என்றேன் சிறு புன்னகையுடனே..

மேலும் ஒரு விசயம்.. இந்த காதல் மொழி என்று சொன்னாய் அல்லவா.. அது எல்லாம் ஒரு சுவாரஸ்யமான விசயம்.. அதில் எனக்கு நம்பிக்கை இல்லை என்றாலும் அதை உணர்பவர்களுக்காக அந்த வீடியோ.. அவ்வளவு தான்.. மற்ற படி எனக்கு இந்த காதல் எல்லாம் எப்போதும் ஒத்தே வராது.. அது ஓர் ரசனை மொழி.. அவ்வளவு தான்.. இதில் நான் காதலில் விழுந்து விட்டேன் என்று நீ நினைப்பது எல்லாம் ஒரு கற்பனை.. என்றேன்..

இந்த விளக்கத்தை கேட்டு விட்டு கிருஷ் சிரித்துக் கொண்டே அதானே.. சூரியன் மேற்கில் உதித்தாலும் உதிக்கலாம்..நீ காதலில் விழ வாய்பில்லை தானே என்று சொல்லி கொண்டே போய் எழுந்து கை கழுவினான்...

நானும் சிரித்துக்கொண்டே வாழ்வின் எனக்கான ரசனையை நீ புரிந்து கொள்ளும் போது உணர கூடும் என்றேன்..

அதுவும் சரிதான் நதி என்று சொல்லி கொண்டே விடைபெற்று சென்றான்..

நானும் அவனை வாசல் வரை வந்து வழியனுப்பி விட்டு வந்து சாப்பிட்டு விட்டு அலுவலகம் செல்ல தயாரானேன்.. உற்சாகமாக..

#அவளோடுஓர்பயணம்

#இளையவேணிகிருஷ்ணா.

கிருஷ்ணா இணையதள வானொலி

 

வணக்கம் நேயர்களே 🙏

இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சி

இன்று படைப்பாளி ராஜீ சென்னையில் இருந்து

கீழேயுள்ள லிங்கில் நிகழ்ச்சி கேட்டு ரசிக்கலாம் 🎻


https://zeno.fm/radio/krishna-fma76ufetpuy8uv/

சம்சாரி போல நடிப்பதை விட...

 

எல்லாவித பயணத்திலும்

ஏதோவொரு சலிப்பே

மிஞ்சி விடுகிறது!

பேச்சற்ற தனிமையில்

நான் பேரானந்த ஊற்றை உணர்ந்துக் கொண்டு

இருக்கும் போது

அந்த சிறு இலை

எனது மடியில் சத்தமின்றி

சயனிக்கிறது!

ஏதோவொன்றிற்கு நான்

அடைக்கலமாகிறேன்

இங்கே என் அனுமதி கேட்டு

எதுவும் நடக்கவில்லை

நான் அந்த இலையின் துயிலை ரசித்து

இந்த இரவை கடக்கிறேன்...

இங்கே சம்சாரிகள் போல

நடிப்பதை விட

உண்மையில் ஒரு தூய்மையான துறவறம் தேவை இங்கே 

எனக்கு என்றுணரும் தருணத்தில் தான்

நான் நானாக இந்த வாழ்வெனும் நதியில்

நிச்சலனமாக பயணிக்கிறேன்...

இங்கே எந்தன் தேவை ஒரு

ஆழ்ந்த அமைதி

இதை உணரும் தருணத்தை

நான் இத்தனை நாள்

தவற விட்டு பயணித்து இருப்பதை பார்த்து

என்னை நானே வியக்கிறேன்...

இரவெனும் நதியின் கரையோரம் நான் இருக்கும் இந்த நிலையில்

அந்த இலையும் நானும்

மௌனமாக அந்த பேரின்ப நிலையை ஒரு புன்னகையோடு ரசிக்கிறோம்...

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.


புதன், 14 ஜூன், 2023

அந்த அலைதல் தேவை அவனுக்கு

 

அந்த அலைதல்

தேவை அவனுக்கு...

எல்லா நிகழ்வுகளும்

கேலி செய்து

சிரித்தபோதும்

அதை பொருட்படுத்தாமல்

அந்த அலைதல்

தேவை அவனுக்கு...

எத்தனை காயங்கள்

மனதில் பட்டபோதும்

அதையும் தாண்டி

அதை ஒரு பொருட்டாக

நினைக்காமல்

அந்த அலைதல்

தேவை அவனுக்கு...

இங்கே எதுவும்

மருந்தாக போவதில்லை

ஒரு பித்தரை போல

அலைதலை தவிர...

அதனால் அந்த அலைதல்

தேவை அவனுக்கு...

#இளையவேணிகிருஷ்ணா.

#இரவுகவிதை.

கிருஷ்ணா இணையதள வானொலி

 

நேயர்கள் அனைவருக்கும் இனிமையான வணக்கம் 🙏

இன்று இரவு இந்திய நேரம் ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சியில் படைப்பாளி ராஜீ சென்னை அவர்களின் கவிதை தொகுப்போடு இனிமையான பாடல்கள் கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் ✨🎻🎻✨


கீழேயுள்ள லிங்கில் நிகழ்ச்சி கேட்டு ரசிக்கலாம் 🎻


https://zeno.fm/radio/krishna-fma76ufetpuy8uv/

செவ்வாய், 13 ஜூன், 2023

தனிமை ஒரு வரம்

 

தனிமை என்பது எல்லாம் மிக பெரிய வரம் ✨

அது போன பிறவியில் கொடுத்து வைத்தவர்களுக்கே கிடைக்கும் ✨

அதை பற்றி சிலாகித்து நிறைய சொல்லலாம் ✨

அதை பற்றி வார்த்தைகளால் சொல்வதை விட அனுபவித்து பாருங்கள் அது ஒரு வரம் என்று தெரியும் ✨😍❤️🎉🥳🍁🐾☕☔

#தனிமைவரம்.

#இரவுசிந்தனை.

நானும் நானும்...

 

தொடர்ந்து அலைபேசியில் அழைப்பு

வந்துக் கொண்டே இருந்தது....

அழைத்தவர்கள் பெரும்பாலும் நேற்று நீங்கள் காதலுக்கு சொன்ன பெரும் உரையில் லயித்து விட்டேன் என்றார்கள்...

எனக்கு ஒன்றும் புரியவில்லை..

நானா காதலை பற்றியா சிலாகித்து பேசினேன் என்றேன்..

ஆம் தாங்கள் தான் என்றார்கள் விடாப்பிடியாக...

ஓ அப்படியா நன்றி என்று சொல்லி விட்டு எந்தவித சலனமும் இல்லாமல் நகர்கிறேன் நான்..அவர்களோ ஒன்றும் புரியாமல் ஒருவரையொருவர் கேள்விக் குறியோடு பார்த்துக் கொண்டார்கள்.. எனக்கு மட்டும் தான் தெரியும் நான் காதலை பற்றி சிலாகித்து பேசி இருக்கலாம்.. அது ஒரு அடர்த்தியான மழை பொழியும் சில மணி நேரம் போன்றது எனக்கு என்று அவர்களுக்கு தெரிய நியாயமில்லை.. அடர்த்தியான மழை பொழிந்து விட்டு ஒரு பேரமைதி நிலவுமே அப்படி தான் எனக்கும் காதலுக்கும் உள்ள புரிதல்.. நல்ல வேளையாக இப்போது இன்னும் அதைப் பற்றி விரிவாக பேசுங்கள் என்று என்னை தொந்தரவு செய்யாமல் நகர்ந்து விட்டார்கள்.. உண்மையில் தற்போது அப்படி கேட்டு இருந்தால் நான் காதலை பற்றி ஏதேதோ உளறி இருப்பேன்.. அவர்கள் எனது நேற்றைய உரையை மீண்டும் கேட்டு ஒப்பீடு செய்து கொண்டு அதை பெரிய விவாதம் ஆக்கி இருப்பார்கள்... இங்கே எனது அடுத்த உரைக்கு அது மிகவும் பெரும் தடையாக இருந்து இருக்கும்..

#நானும் #நானும்

#இளையவேணிகிருஷ்ணா.

மழையோடு நிதானமாக ஒரு நடை

 

அத்தனை ஆக்ரோஷமாக வந்த மழை கொஞ்சம் அடங்கி பெரும் தூறலாக அடர்த்தியாக பெய்கிறது... அந்த மழையில் குடையும் இல்லாமல் துப்பட்டாவையும் தலைக்கு கவசமாக இடாமல் சாலையில் நடக்கிறேன் மிக மிக மெதுவாக மிரட்டும் மின்னலையும் இடியையும் பொருட்படுத்தாமல்.. இத்தனைக்கும் போன மாதத்தில் இங்கே இடி மின்னல் தாக்கியதில் இறந்தவர்கள் அதிகம்.. ஆனாலும் அதற்கெல்லாம் பயந்தால் இயல்பான இந்த நொடி மழையோடு நிதானமாக நடக்கும் ரசனையை இழந்த பெரும் பாவியாவேன்...

என்னை கடந்து செல்லும் நான்கு சக்கர வாகனங்கள் சாலையில் நிதானமாக நடந்து செல்லும் என்னை பார்த்து வேகமாக ஒலியை எழுப்பி மிகவும் வேகமாக செல்கிறது... ஏன் இத்தனை அவசரம் என்று அந்த வாகனத்தை பார்த்து விட்டு கன்னத்தில் வழியும் மழையின் முத்தத்தை துடைக்க மனமில்லாமல் நடக்கிறேன்.. இந்த மாதிரி மீண்டும் எப்போதாவது அந்தி மாலைப் பொழுது எப்போது வாய்க்கும் என்ற ஏக்கத்தோடு...

இதோ கொஞ்சம் கொஞ்சமாக மழை நிற்கும் ஒலி என் செவிகளை அடைகிறது.அது முழுவதும் நின்றவுடன் மாடியில் இருந்து வரும் தண்ணீர் சப்தம் மட்டும் தனியான பேரின்ப இசையாக கேட்கும்..அதை ரசித்துக் கொண்டே ஏதோவொரு இசையை கேட்பதில் அலாதி பிரியம் எனக்கு...

இப்போது உங்கள் மைண்ட் வாய்ஸ் எனக்கு கேட்கிறது அது என்ன என்று சொல்லட்டுமா 😊

இங்கே மழை என்று இரண்டு வார்த்தையில் போட வேண்டிய பதிவை இப்படி என்னவோ ஏதோவொன்று வாசிக்க வைத்து எங்கள் நேரத்தை திருடுவதில் உங்களுக்கு ஏன் இவ்வளவு ஆவல்...இது தானே நீங்கள் என்னிடம் கேட்க நினைத்த கேள்வி 😊...

மீண்டும் ஒரு மழையோடு நடந்த பயண அனுபவத்தில் சந்திப்போமா நேயர்களே 🎻🙏✨☕☔..

எங்கே ஓடுகிறீர்கள் கொஞ்சம் நில்லுங்கள் 😀

#மழையோடு #ஒரு #நிதானமான #நடை

#இளையவேணிகிருஷ்ணா.

சாயங்கள் தேவையில்லை...

 

சுயங்கள் எப்போதும்

எந்தவித சாயங்களை பூசிக் கொண்டும் அலைவதில்லை !

சொல்லப்போனால்

சாயங்களின் தேவைகளே

அதற்கு இல்லை!

இப்படி தான் நான்

என்னை அடையாளப்படுத்திக் கொண்டு அலையும் போது

அங்கே பல வண்ணங்கள் பரிதாபமாக பார்க்கிறது!

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

திங்கள், 12 ஜூன், 2023

கிருஷ்ணா இணையதள வானொலி

 

நேயர்கள் அனைவருக்கும் இனிமையான வணக்கம் 🙏

தற்போது இந்திய நேரம் ஒன்பது மணி முதல் பத்து மணி வரை இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சியில் இன்று கவிஞர் ராஜீ அவர்களின் இனிமையான கவிதை தொகுப்போடு அவர்களின் விருப்ப பாடல்களை கேட்டு மகிழலாம் வாருங்கள் நேயர்களே 🎻✨🎉#கிருஷ்ணாஇணையதளவானொலி.

கீழேயுள்ள லிங்கில் நிகழ்ச்சி கேட்டு மகிழலாம் 🎻


https://zeno.fm/amp/radio/krishna-fma76ufetpuy8uv/

ஞாயிறு, 11 ஜூன், 2023

அடமானம்

 

அன்பர்களே வணக்கம்.

            இன்றைய வாழ்க்கையில் அடமானம் என்பது எல்லோருடைய வாழ்விலும் ஏறக்குறைய நடந்து விடுகிறது. ஒரு ஏழை தனது வயிற்று பிழைப்பிற்காக தன்னிடம் உள்ள ஏதோவொன்றை அடமானம் வைக்கிறார்.ஒரு பணக்காரன் தனது ஆசையை பூர்த்தி செய்துக்கொள்ள தனது பொருளை அடமானம் வைக்கிறார்.அடமானம் என்பது ஏதோவொரு வகையில் அனைவர் வாழ்விலும் நிகழ்ந்து விடுகிறது. 

     சரி.அந்த அடமானத்தை நாம் விவாதப்பொருள் தற்போது ஆக்கவேண்டாம்.விட்டு விடலாம். நான் கூற வந்தது வேறு ஒரு அடமானம். என்ன புரியவில்லையா?புரிந்துக்கொள்வீர்கள் இந்த பதிவின் மூலம்.

      இன்றைய இளைஞர்கள் மிகுந்த உணர்வுப்பூர்வமாகவே அனைத்தையும் மேற்கொள்கிறார்கள்.ஒரு பெண்ணை காதலிப்பது குற்றம் இல்லை. காதலித்த பெண் கிடைக்கவில்லை என்பதற்காக தற்கொலை செய்து கொள்வது தன்னையே துன்புறுத்தி கொள்வது பைத்தியம் பிடித்தது போல் அவள் நினைவாகவே இருப்பது இவை எல்லாம் மிகவும் வேடிக்கையாக இல்லையா?நீங்கள் இந்த விசயத்தில் உங்கள் வாழ்க்கையை அந்த பெண்ணிடம் அடமானம் வைத்து விட்டீர்கள் என்று தானே அர்த்தம்?

       உங்களுக்கு அந்த பெண்தான் என்றால் திருமணம் நடக்க போகிறது. இதற்கு ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம்?உண்மையிலேயே சொல்லுங்கள். வாழ்க்கையில் நீங்கள் மிகவும் நேசித்தவர் இந்த உலகை விட்டு சென்று விட்டார் என்று வைத்துக்கொள்வோம்.நீங்கள் அவருக்காகவே வாழ்வை தியாகம் செய்வீர்களா?அப்படி செய்தால் அதைவிட முட்டாள்தனம் வேறு என்ன இருக்க முடியும்? 

     நீங்கள் ஏதோவொரு நிகழ்ச்சியை சாதிக்க இந்த பூமிக்கு வந்திருக்கிறீர்கள்.இடையில் காதல் என்பதையும் ஒரு நிகழ்வாக கடந்து போக வேண்டுமே ஒழிய அதை பிடித்து தொங்கி கொண்டு உங்கள் வாழ்க்கையை வீணடிக்கக்கூடாது.உங்களுக்கு என்று எது உள்ளதோ அது உங்களை கேட்காமலே உங்களை வந்தடையும்.

        காதலையும் கடந்து விடுங்கள். உற்சாகமாக இருங்கள். உங்கள் வாழ்க்கையை தேவையில்லாமல் ஒரு பெண்ணிடம் அடமானம் வைக்காதீர்கள். இன்னும் எவ்வளவோ விசயம் இருக்கிறது இந்த பூமியில் நீங்கள் சாதிக்க. அதை விட்டு விட்டு அற்பத்தனமாக நடந்து கொள்ளாதீர்கள்.

     எதற்காகவும் உங்கள் வாழ்க்கை அடமானம் வைக்காமல் நீங்கள் நீங்களாக இருந்து உங்கள் அனுபவங்களை இந்த பூமியில் தூவி செல்லுங்கள். அது நீங்கள் யார் என்று இந்த உலகத்திற்கு அடையாளப்படுத்தும்.

       பந்தப்பாசத்தில் வாழ்க்கையை அடமானம் வைத்து விட்டால் அதை உங்களால் மீட்கவே முடியாது. குடும்பத்தில் தேவையாவர்களுக்கு தேவையானதை பற்று இல்லாமல் எந்தவித பிரதிபலனும் இல்லாமல் செய்தால் தான் உங்கள் வாழ்க்கை அடமானத்திலிருந்து தப்பிக்கும்.

   என்ன அன்பர்களே அடமானம் இல்லாத வாழ்க்கை ஆனந்தம் தானே?முயற்சி செய்யுங்கள். உங்களால் முடியும்.💐💐💐💐💐.

#இளையவேணிகிருஷ்ணா.

சம்சார தாபத்தில் இருந்து வெளியே வர

 

அன்பர்களே வணக்கம்.

        நாம் அனைவரும் சம்சார பந்தத்தில் சிக்கி தவிக்கிறோம். சம்சார சாகரத்தில் நாமாக நீந்தி கரையேற முடியுமா என்றால் முடியாது. ஏனெனில் சாதாரண சாகரத்தை போல அல்ல அது.அது மிகப்பெரிய சாகரம். இதில் இருந்து வெளியேறவே ஆத்ம ஞானிகள் முயலுவர்.ஆனால் அது புதைகுழிப்போல நம்மை உள்ளே இழுக்கும். நாம் நாமாக முயற்சி செய்தால் மீண்டும் கூட கொஞ்சம் உள்ளே சென்று மாட்டிக்கொள்வோம்.

      இதற்கு என்ன தான் வழி என்கிறீர்களா ?.நாம் நம் அகங்காரத்தை விட்டு விட்டு இறைவன் திருவடியை நன்றாக பிடித்துக்கொள்ள வேண்டும். பெற்ற தாயிற்கு பிள்ளை மேல் பாசம் இருப்பதைப்போல இறைவன் இப்போதாவது தனது அகங்காரத்தை விட்டு விட்டு தன்னிடம் வந்தானே என்று ஆனந்தம் கொள்வார்.

    இது எப்படி இருக்கும் தெரியுமா ?ஒரு தாய் தனது குழந்தையை நீண்ட நாட்களாக பிரிந்து தவிக்கும் போது திடீரென ஒருநாள் அவள் எதிரில் வந்து நின்றால் அவள் எவ்வாறு அகம் மகிழ்வாளோ அதைவிட பல்லாயிரம் மடங்கு ஆனந்தம் கொள்வார் எம்பெருமான்.

      ஆனந்த கண்ணீரோடு அணைத்துக்கொள்வார்.பிறகு இந்த பக்தன் தன்னை சம்சார சாகரத்தில் இருந்து மீட்டு எடுங்கள். எனக்கு வழி தெரியவில்லை என்று கண்ணீர் வடிப்பான்.அவரோ நீ எப்போது என் திருவடியை சரணடைந்தாயோ அப்போதே உனது பாவங்களை முழங்கால் அளவு வற்றடித்து விட்டேன். மீதமுள்ள பாவமும் எனது கருணையினால் கரையும் என்பார்.இருவரும் ஆனந்த கண்ணீர் வடிப்பார்கள்.

   சரி திருப்பதி பெருமாள் ஒரு கையை தனது முழங்காலை நோக்கியும் இன்னொரு கையை தனது திருவடி நோக்கியும் வைத்திருப்பார் அல்லவா.அதன் தத்துவம் இதுதான். என்னை சரணடைந்தவர்களுக்கு நான் சம்சாரத்தின் அல்லல்களை முழங்கால் அளவு வற்ற செய்வேன் என்பது தான்.

     இப்போது பாருங்கள். பெருமாளை இதனை ஆமோதித்து உங்களை பார்த்து புன்னகைப்பார்.☺️☺️☺️

மன அழுத்தத்திற்கு தீர்வு

 


அன்பர்களே வணக்கம்.

    இன்று நாம் பார்க்க போவது மன அழுத்தம். என்ன அன்பர்களே உங்கள் மன அழுத்தம் ஞாபகம் வருகிறதா?இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மன அழுத்தம். 

       இந்த மன அழுத்தம் ஏன் ஏற்படுகிறது என்று பார்த்தால் நாம் முயற்சி செய்யும் ஒரு விசயம் தோல்வி அடையும் போது அல்லது வாழ்க்கையில் நாம் இன்னும் நிறைவு பெறவில்லை என்கிற போது அல்லது தனிமையில் அதிக நேரம் இருக்கும் போது அல்லது நம்மை நாமே நம்பாமல் இருக்கும் போது இப்படி.

     குழந்தைகளுக்கு மதிப்பெண் குறைவாக வாங்கும் போது அல்லது ஒப்பீடு செய்யும் போது அல்லது பெற்றோர்கள் குறைகூறிக்கொண்டே இருக்கும் போது இப்படி.

     இன்னும் எத்தனையோ இருக்கிறது.

சரி நாம் முதலில் என்ன நடக்கிறதோ அதை ஏற்றுக்கொள்ள பழக வேண்டும். மனதில் எப்போதும் எதையாவது நினைத்து கொண்டே இருக்கக்கூடாது. மேலும் மனதில் ஒன்று போனால் ஒன்று விருப்பங்களை போட்டு கொண்டே இருக்கக்கூடாது.

     நமது வாழ்க்கையில் நடப்பதை தள்ளி நின்று வேடிக்கை பார்க்க பழகிக்கொள்ள வேண்டும். தோல்விகள் வரத்தான் செய்யும். அதிலேயே மூழ்காமல் தூக்கி போட்டு விட்டு அடுத்தது என்ன அடுத்தது என்ன என்று போய்க்கொண்டே இருக்க வேண்டும். எங்கேயும் தேங்கி விடக்கூடாது. தேங்கினாலே பிரச்சினை தான்.

         எதையும் எளிதாக எடுத்து கொள்ள பழக வேண்டும். உங்கள் குறிக்கோள் இப்போது நிறைவேறவில்லை.அவ்வளவு தான். அதற்காக எப்போதும் இல்லை என்ற அர்த்தம் இல்லை.

      உங்களை பற்றி யார் என்ன சொன்னாலும் கண்டுக்கொள்ளாதீர்கள்.என்ன அவதூறு பேசினாலும் .உங்களுக்கு உள்ள நேரம் மிகவும் குறைவு. அதை உங்களுக்காக உங்கள் முன்னேற்றத்திற்காக செலவிடுங்கள். முன்னேற்றத்தைவிட உங்கள் ஆத்ம திருப்திக்காக செயல்படுங்கள்.

    ஆத்ம திருப்தி உள்ள வேலையே உங்களை சலிப்படைய செய்யாது.அதில் நீங்கள் நினைக்கும் அளவுக்கு அங்கீகாரம் கிடைக்காமல் இருந்தாலும் கவலைக்கொள்ள மாட்டீர்கள்.

    சம்பாதிப்பது மட்டும் தான் வாழ்க்கையில் முன்னேற்றம் என்று எந்த முட்டாள் வகுத்தது.நமக்கு பிரியமான வேலையே நமக்கு எப்போதும் சந்தோஷத்தை கொடுக்கும். நமது ஆத்மதிருப்தியை இழந்து எதை சம்பாதித்தாலும் நாம் வாழ்க்கையை தொலைத்தவர்களே.

    உங்கள் வாழ்க்கை அடிப்படை தேவைக்கு போக மீதி நேரத்தை உங்களுக்கு மகிழ்ச்சி தரும் வேலையில் செலுத்தினீர்கள் என்றால் வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும்.

என்ன நான் சொல்வது சரிதானே அன்பர்களே!💐💐💐💐💐

சனி, 10 ஜூன், 2023

சிதிலமடைந்த வீட்டின் வலி

 


அந்த சிதிலமடைந்த

வீட்டின் வலியை

அங்கே வந்து சென்ற

சில பறவைகள்

அறியக் கூடும்

சில வருடங்களுக்கு

முன்பு வரை

இங்கே கூடி கூட்டமாக

தானியங்களை சாப்பிட்டு விட்டு 

பறந்து அடுத்த நாளும்

அங்கே வந்து பார்த்து 

ஏமாந்த போது தான்

தெரிந்தது!

அந்த வீட்டில் வசித்த

அந்த மனிதருக்கும்

வறுமை வரக் கூடும் என்று

தாம் அறிந்து 

வைத்திருக்கவில்லையே என்று

கொஞ்சம் யோசித்துப் பார்த்து

தன் சிறகை விரித்து உடனே

பறந்து விட்டது ...

சில பல தானியங்கள் 

அங்கே முன்னேற்பாடாக

அங்கே அந்த வீட்டின் உரிமையாளர் 

போட்டு விட்டு சென்றதை

சாப்பிட மனமில்லாமல் ...

#கொஞ்சம்தேநீர்

#கொஞ்சம்கவிதை 🍁

#இளையவேணிகிருஷ்ணா.

வெள்ளி, 9 ஜூன், 2023

எனது அபூர்வ பிறவியின் இரகசியம்...

 


ஆழ்ந்த புரிதலில்

ஒருவித மயக்கமும்

இல்லாமல் என்னால் 

பயணிக்க முடிகிறது!

ஆழ்ந்த மௌனத்தில் தான்

எனது ஆன்மாவின் தேடல் 

நிறைவடைகிறது!

இங்கே இருக்கும் 

இரைச்சலில் இருந்து

கொஞ்சம் தள்ளியே பயணிக்க 

எனக்கு பெரும் வாய்ப்பு 

கொடுக்கப்பட்டு இருப்பதால் 

அதை விட்டு விடாமல் 

பயணிக்கிறேன்!

இங்கே எனது பூரணத்துவத்தை 

சிதைத்து விடும் 

எந்த காரணியையும் 

துணையாக பயணிக்க விடாமல்

சுயத்தோடு பிரகாசமான 

ஜோதியிலும் நான் மட்டுமே 

மற்றவர்களுக்கு 

ஆச்சரியமாக தெரிகிறேன்...

இது தான் எனது அபூர்வ பிறவியின் 

இரகசியம்✨

#இளையவேணிகிருஷ்ணா.