ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

சனி, 7 அக்டோபர், 2023

இரவு கவிதை 🍁


அத்தனைவித பகலின் பரபரப்பும்

அடங்கி விட்டது...

இதோ இந்த இரவின் நீட்சியில்

நான் கலந்து விட துடிக்கிறேன்..

ஒரு இளைப்பாறுதலுக்காகவா 

என்றால்

நிச்சயமாக இல்லை...

ஒரு ஆழ்ந்த மௌனத்தின் 

மெல்லிசையில்

கரைந்து எனக்குள் நானே

தொலைந்து போக இதை தவிர

எனக்கு வேறு காலம் இல்லை..

என்பதற்காக தான்...

#இரவு கவிதை 🍁

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:07/10/2023.

நேரம் இரவு 9:20.

2 கருத்துகள்:

  1. அற்புதமான வரைவு 👌👍 தோழி

    பதிலளிநீக்கு
  2. மிகவும் மகிழ்ச்சி தோழி... தங்களது மேலான விமர்சனங்கள் தொடர்ந்து வர எதிர்பார்த்து காத்திருக்கிறேன்...🙏

    பதிலளிநீக்கு

சாலையோர புழுதியில் நனைந்த ஓவியம்...

 அந்த பிரமாண்டமான வீட்டில்  வாழ்ந்து கொண்டு  இருப்பவர் சில நாட்களில்  உற்சாகம் இழந்து  அவர் தாம் பார்த்து பார்த்து கட்டிய  அந்த வீட்டில்  உள...