ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

திங்கள், 28 நவம்பர், 2022

நானும் இந்த இரவும்

 


இரவெனும் வெளியில்

சத்தம் இல்லாமல் பயணிக்கிறேன்..

இங்கே எதிர்பார்ப்பு இல்லாத

அரவணைப்பை

இரவை தவிர எதுவும்

தர இயலாது..

சல்லி காசு பயன் ஏதும்

என்னிடம் எதிர்பார்க்காமல்

ஒரு அரவணைப்பு

இயற்கையால் கொடுக்கப்பட்டு இருக்கிறது..

இன்றைய நிகழ்வை

மீட்டி பார் என்கிறது

என்னோடு உறவாடும்

இந்த இரவு...

நானோ அதை செல்லமாக

கோபிக்கிறேன்..

போன பொழுதின் நினைவுகளை அப்படியே

விட்டு விடு இரவே...

இங்கே நீ நான் மட்டும்

போதும்..

நமக்கிடையே இன்று நடந்த

நிகழ்வை ஏன் சேர்த்துக் கொண்டு குளிர் காய வேண்டும்?

நாம் நாமாக பயணிப்போம்

சத்தம் போடாதே..

இங்கே எவரும் வந்து விடக் கூடும் 

உன் குரல் கேட்டு..

நம் தனிமையின் ஆனந்தத்தை விட்டு

விலகி விட அனுமதிக்காதே

உன்னோடு கலந்து விடும்

இந்த நேரத்தின் இனிமையை 

பெரும் காதலின் 

உணர்வற்றவர்கள் புரிந்து கொள்ள 

முடியாது என்றேன் 

அதை இரவும் ஆமோதித்தது..

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஒரு நகரத்தின் பரபரப்புகளுக்கிடையே பறக்கும் பட்டாம்பூச்சியாக...

என் உயிர் சுவாசத்தின்  தீண்டலாக  நீ என்னோடு  ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின்  பரபரப்புக்குகளுக்கிடையே ...