சூழ்ச்சிகளின் வலையில்
சிக்கி விட்டாலும்
சூரியனின் ஞானம்
உன்னை பொசுக்காது
காத்திருக்கிறது..
கால சக்கரம் சுழன்று சுழன்று ஓடிவிட்ட போதும்
உன் தானத்தின் மகிமை
மட்டும் சுடர் விட்டு ஒளிர்கிறது...
துரியோதனின்
பெண் தாபத்தின் தீர்க்கத்தை...
நில மகள் மீதான
மோகத்தை
இங்கே நீ உணர்த்தி விட
ஒரு நாடகம் அரங்கேற்றம்
செய்தாய்..
கண்ணனுக்கு நிகராக..
உன்னை அஞ்ஞானி என்று
மூடர்கள் சொல்லக் கூடும்
ஆதவனின் பேரொளியில்
எப்படி மூடர்கள் தோன்றக் கூடும்??
நீயும் அந்த கண்ணனும்
எனக்கு ஒரே அம்சத்தின்
இரு வடிவமே...
தாபம் எதில் என்பதில்
ஆயிரம் கேள்விகள்
இங்கே?
தேகத்தின்
தாபத்தை தேடி அலைபவர்களுக்கு
இது புரிய போவதில்லை..
தானத்தின் மீதான தாபத்தை
தவிர வேறெதுவும்
எனக்கு இங்கே
ஞாபகம் இல்லை...
வாக்குறுதிகள் மீதான
தாபத்தின் தகிப்பை
இங்கே முழுமையாக
உன்னை பார்த்து
தெரிந்துக் கொண்டபின்
வாழ்வின் தாத்பரியம்
வெகுசிலரே உணர்ந்து
பயணிக்கக் கூடும்..
அதில் நானும் ஒருவர் என்று
ஆனந்த கூத்தாடி
மகிழ்கிறேன்..
#கர்ணன்.
#இளையவேணிகிருஷ்ணா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக