அந்த நடுத்தர வயது வங்கி வாடிக்கையாளர் ஒருவர் பணம் ஐநூறு ரூபாய் சலானில் எழுதிக் கொண்டு செல்கிறார்.. அங்கே கேஷியர் அவர் கணக்கை பரிசோதித்து விட்டு உங்கள் கணக்கில் ஐநூறு ரூபாய் சற்று முன்பு வரை இருந்தது.. இப்போது உங்கள் கணக்கில் இருந்து சில கட்டணங்களுக்காக வங்கி எடுத்துக் கொண்டது.. இன்னும் இருநூறு ரூபாய் நீங்கள் கட்டி விட்டு போங்கள் என்று சொன்னார்.. வாடிக்கையாளர் அந்த கணக்கை அப்படியே வைத்திருங்கள்..இனி இந்த கணக்கில் நான் பணத்தை போட போவதில்லை..வேறொரு கணக்கை வேறொரு வங்கியில் துவங்க போகிறேன் என்றார்.. அங்கேயும் இதே விதி தான் இருக்கும் என்றார் வங்கி கேஷியர்.. பரவாயில்லை... நான் அங்கே தொடங்கிக் கொள்கிறேன் என்றார் பிடிவாதமாக..அப்பொழுது இந்த கணக்கின் அபராதம் எப்போது செலுத்துவீர்கள் என்று கேட்டார்.. அது வரை பொறுமையாக பதில் அளித்து வந்தவர் இந்த கணக்கின் அபராதம் தானே அடுத்து வரும் எனது ஏழாவது ஜென்மத்தில் செலுத்துவேன் போ ஐயா என்று வேக வேகமாக வங்கியை விட்டு வெளியே வந்து விட்டார்.. அந்த நாட்டு நடப்பின் சாயல் எதுவும் படியாத நடத்தர வயது முதியவர்...#வங்கிஅலப்பறைகளும்#வங்கிவாடிக்கையாளர்களின் #அவஸ்தையும்.#இளையவேணிகிருஷ்ணா.
ஆனந்தமாக வாழுங்கள்
வாழ்க்கை பற்றிய புரிதல்
திங்கள், 21 நவம்பர், 2022
ஒன்றும் அறியாத வங்கி வாடிக்கையாளர் அவஸ்தை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பெரும் போரின் உக்கிரத்தை தணித்து...
நீயோ குருட்டு பிடிவாதத்தால் எவரின் தூண்டுதலாலோ விலகி விலகி பயணிக்கிறாய் என்னிடம் இருந்து... அந்த உக்ரைனை போல... நானோ உன்னை என் பேரன்பின் ...
-
பல ஆயிரம் ஆயிரம் வேடிக்கைகளில் இதுவும் ஒன்று... வெளியே காட்டப்படும் பிம்மத்தில் மறைந்து இருக்கும் சூட்சுமத்தை இங்கே யார் அறியக் கூடும்? அந...
-
பிரிவதும் சேர்வதும் இங்கே சிலாகித்து பேசப்படுகிறது... இதற்கிடையே ஒரு மெல்லிய அன்பின் சிலாகிப்பை... அந்த இருவரின் ஆழ் மனதில் அமிழ்ந்து ...
-
அந்த பிடிமானமற்ற தனிமையில் தான் ஆயிரம் ஆயிரம் ஆழ்ந்த தேடலின் சுவடுகள் எனை கொஞ்சம் நிதானமாக கடந்து கடந்து போகிறது... நானும் நிதானமாக அது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக