ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

ஞாயிறு, 6 நவம்பர், 2022

மாயநதி பசி தீர்க்குமோ


 விவசாயிகளின் பசி போக்கும் மழை:-

மாயநதியின் ஈரம்

தாகத்தை தீர்க்காது..

விண் விட்டு மண்ணை நனைத்து

பயிர் செழிக்க வந்த மழையை

பாராமுகமாக சமுத்திரத்தில்

கலக்க விட்டு

கண் கலங்கி நிற்கும்

பேதை மனிதர்களே!

உங்கள் உன்னதமற்ற

அந்த செயலால் 

பெய்யும் மழையின் 

உயிர் வலியை

என்று நீங்கள் உணரக் கூடும்?

பசியின் கொடுமையால்

இந்த பிரபஞ்சம்

பற்றி எரியும் போதா?

விண் அமுதம் கொண்டு

பசி தீர்க்க முனையும்

விவசாயியின்

கண்களில் வழியும்

கண்ணீரை எவரோ

துடைக்க முனையக் கூடும் என்று காத்திருக்கிறார்கள்

அங்கே பல விவசாயிகள்

கண்களில் நம்பிக்கையோடு..

#இளையவேணிகிருஷ்ணா.

1 கருத்து:

வாழ்க்கை ஒரு சமன்பாடு தான் -சூபிஞானி கதை 🎉🦋

  வணக்கம் நேயர்களே 🎻🙏  இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட...