ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

திங்கள், 9 ஜனவரி, 2023

நான் கொஞ்சம் உறங்க வேண்டும்

 

விடை தெரியாத கேள்விகள்

ஆயிரம் ஆயிரம்

மனதில் அலைபோல

வந்து வந்து போகிறது...

ஒரு கேள்விக்கேனும்

விடை கிடைத்தால் போதும்

நான் கொஞ்சம் ஆறுதல் அடைவேன்...

விடைகளை தேடி தேடி

ஓய்ந்தது மனது...

கேள்விகளெனும் அலைகளே...

கொஞ்சம் அமைதியடையுங்கள்...

நான் கொஞ்சம் உறங்க வேண்டும்...

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நீள் இரவின் கொடுமை...

  நீ பிரிந்து சென்ற  ஒவ்வொரு நாளின்  இரவையும்  கடந்து செல்வது  அவ்வளவு எளிதல்ல  எனக்கு... அது நரகத்தின் வேதனையை  எனக்கு தந்து  அந்த காயத்தில...