ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வெள்ளி, 20 ஜனவரி, 2023

காதலும் ஜென்னும்

 

உனக்கு காதல்

இயல்பில்லை என்று

சொல்கிறது மனது...

ஆம்... இயல்பில்லை தான்..

என்கிறேன் நான்...

பிறகெப்படி காதல் கவிதை

என்று கேட்கிறது...

அது ஒரு ஜென் நிலை என்கிறேன் நான்...

என்ன குழப்புகிறாய்

என்றது மனது...

ஆம் நீ கொஞ்சம் அமைதியாக விலகி இரு..

நான் தற்போது அந்த ஜென் நிலையில்

நான் தொலைத்த அந்த காதல் நிலையை

தற்போது உணர்ந்துக் கொள்கிறேன் என்றேன் நான்...

மனதோ சரியான பைத்தியமோ என்று

கொஞ்சம் என்னை பார்த்து

மிரட்சியோடு விலகி செல்கிறது...

இப்போது முழுமையாக உணர்கிறேன் நான்

அந்த ஜென் நிலையை...

#காதலும்ஜென்னும்.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சங்க இலக்கியம்//நற்றிணை பாடல் (5)

  நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப, அகல் வாய்ப் பைஞ் சுனைப் பயிர்  கால்யாப்ப, குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர் நறுங் காழ் ஆரம் சுற்றுவன அகை...