ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

திங்கள், 9 ஜனவரி, 2023

தோற்றது இங்கே இருவரும்

 

சராசரி வாழ்வியலை

கற்றுக் கொள்ள

காலம் வற்புறுத்துகிறது..

நானோ மிக குறைந்த மதிப்பெண் கூட

வாங்க முடியாமல்

சராசரி வாழ்வியல் எனும்

பாடத்திடம் தோற்கிறேன்..

நான் தோற்கிறேன்...

சரி ஏற்றுக் கொள்ளலாம்..

காலம் ஏன் தோற்க வேண்டும் என்னிடம்?

இருவருமே தோற்கிறோம்

இங்கே...

இது ஒரு விசித்திரமான

வாழ்வியல் என்று

கண்டவர்கள் கேலி செய்து

போகிறார்கள்...

நானும் காலமும்

எங்கள் தோல்வியை நினைத்து நினைத்து

அழுகிறோம் சிரிக்கிறோம்

அழுகிறோம் சிரிக்கிறோம்...

இப்படி இருப்பது

எங்களுக்கு ஒன்றும் புதிதல்ல...

#வாழ்க்கை

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சங்க இலக்கியம்//நற்றிணை பாடல் (5)

  நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப, அகல் வாய்ப் பைஞ் சுனைப் பயிர்  கால்யாப்ப, குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர் நறுங் காழ் ஆரம் சுற்றுவன அகை...