ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

சனி, 28 ஜனவரி, 2023

காலத்தின் பெருந்தன்மை

 

காலம் என்னை

சிரிக்க வைக்கிறது;

காலம் என்னை அழ வைக்கிறது;

காலம் என்னை சஞ்சலப்படுத்துகிறது;

காலம் என்னை

கொல்கிறது...

இப்படி அங்கே பல கோடி பேர் 

பிதற்றுவதை கேட்டு

காலம் எந்தவித கோபமும் இல்லாமல்

கொஞ்சம் புன்னகைத்து

அவர்களை கடந்து செல்கிறது...

காலத்தின் பெருந்தன்மை 

குணத்தை பார்த்து

கொஞ்சம் சிலிர்த்து தான்

போகிறேன் நான்...

#காலம்

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நீள் இரவின் கொடுமை...

  நீ பிரிந்து சென்ற  ஒவ்வொரு நாளின்  இரவையும்  கடந்து செல்வது  அவ்வளவு எளிதல்ல  எனக்கு... அது நரகத்தின் வேதனையை  எனக்கு தந்து  அந்த காயத்தில...