அந்த வறட்சியான எண்ணங்களுக்கிடையே
நடக்கிறேன்...
பாதை பழகிய பாதங்கள்
எந்தவித தடையும் இன்றி
நடக்கிறது...
என் மனமெனும் திரையில்
ஏதோவொரு காட்சி படம்
ஓடி என்னை கவர பார்க்கிறது...
நான் அதை கண்டுக் கொள்ளாமல் பயணிக்கிறேன்...
வாழ்வின் சுவை என்று
ஏதேதோ சொல்லிக் கொண்டே
இருப்பவர்களை கூட இப்போது
நான் ஒரு வெறுமையான
பார்வையோடு கடந்து செல்கிறேன்...
எந்த சந்தர்ப்பத்தையும்
நான் தேடி
அலையவில்லை...
அமையும் சூழலை கூட
தவிர்க்கிறேன்...
காலியான மனம் ஒன்றை
வேண்டும் போது
ஆயிரம் ஆயிரம் விசயங்கள் அத்தனையும் என்னை
வெறிக் கொண்டு தாக்குகிறது...
நான் அந்த தாக்குதலில்
மறைந்துக் கொள்ள போராடும் போது
அங்கே ஒரு நதியின்
இலேசான சலசலப்பு
என்னை அருகில் அழைத்து
கரையோரம் அமர வைத்தது
நானும் நதி சொல்லி தந்த
பாடத்தை கடத்திக் கொண்டேன் என் மனதிற்குள்...
நான் ம்ம் என்று தலையசைத்ததை பார்த்து
என் காதில் ஏதேனும் ஒலிக் கருவி வைத்து இருக்கிறேனா என்று
பக்கத்தில் வந்து ஆராய்ந்து
ஏமாற்றம் அடைகிறார்கள் சிலர்..
அந்த இருள் சூழ்ந்த வேளையில்...
நானும் நதியும்...
பேரன்பில் அமைதிக் கொள்கிறோம்...
வாழ்வின் சுவை என்று
சொல்லால் சொல்லி விட
முடியாது என்று
இங்கே எத்தனை பேருக்கு தெரியும்?
#வாழ்வின்சுவை.
#இளையவேணிகிருஷ்ணா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக