ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

சனி, 21 ஜனவரி, 2023

காலமெனும் நதி

 

காலமெனும் நதி

என்னை கடத்தி செல்கிறது

நான் அதில் சும்மா

மிதக்கும் மிதவையாக...

எதையும் செய்யாமலேயே

நான் கரையேறுகிறேன்...

அங்கே பல கோடி பேர்

அந்த காலத்தோடு போராடி

மூழ்கிக் கொண்டு

இருப்பதை பார்த்து

நான் கரையில் நின்று

ஆச்சரியமாக பார்த்து

புன்னகைக்கிறேன்...

போராடாதீர்கள்...

வாழ்வெனும் நதி

உங்களை எதையும் செய்யாமல் இருக்க தான்

வலியுறுத்துகிறது என்று

முணுமுணுத்து

மெல்லமாக நகர்கிறேன்...

நான் அந்த காலமெனும் நதிக்கு அமைதியாக

நன்றி சொல்லி விட்டு....

#காலமெனும் நதி.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாழ்க்கை ஒரு சமன்பாடு தான் -சூபிஞானி கதை 🎉🦋

  வணக்கம் நேயர்களே 🎻🙏  இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட...