ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

புதன், 11 ஜனவரி, 2023

நான் அப்படி தான்

 

பல தருணங்கள்

என்னை உதாசீனப்படுத்தி

கடந்து விடுகிறது

பின் விளைவுகளை

எண்ணாமல்...

நான் அதை பொருட்படுத்தாமல்

கடந்து செல்கிறேன்

கொஞ்சமும் தயக்கமோ

கலக்கமோ இன்றி...

தொலைதூரம் சென்ற பிறகு

என்னை நினைத்து

ஏங்கி அழுகிறது

அந்த தவற விட்ட தருணங்கள்...

நான் அப்போதும்

சிறிதும் இரக்கமின்றி

நிற்காமல் கடந்து செல்கிறேன்...

எப்போதும் ஒன்று அல்லது இரண்டு முறை தான்

நான் வாய்ப்பு கொடுப்பேன்

என்பது என்னை நன்கு

அறிந்தவரை தவிர

எவர் அறியக் கூடும்?

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாழ்க்கை ஒரு சமன்பாடு தான் -சூபிஞானி கதை 🎉🦋

  வணக்கம் நேயர்களே 🎻🙏  இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட...