ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

சனி, 21 ஜனவரி, 2023

எனை தழுவும் போதை

 

இங்கே எனை தழுவும்

ஒரு போதையொன்று

உள்ளது என்றேன் காலத்திடம்...

அப்படியா என்று ஆச்சரியமாக கேட்டு

அது ஆவலோடு நிற்க

நான் இதோ உன்னை நேசித்து கிடக்கும்

போதை தான்

என் வாழ்வில் நான் 

எப்போதும் விரும்பும்

ஒரு போதை என்றேன்

புன்முறுவலோடு...

காலமோ நானும் தான்

உன்னை நேசித்து கிடக்கும்

போதையாகிறேன் என்றது

சற்றும் சலிக்காமல்...

#காலமும்நானும்

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சங்க இலக்கியம்//நற்றிணை பாடல் (5)

  நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப, அகல் வாய்ப் பைஞ் சுனைப் பயிர்  கால்யாப்ப, குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர் நறுங் காழ் ஆரம் சுற்றுவன அகை...