ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வெள்ளி, 20 ஜனவரி, 2023

அந்த அசாதாரண நிகழ்வு

 

அந்த அசாதாரண நிகழ்வொன்றில்

நானும் தனிமையும்

பேசாமல் பேசிக் கொள்கிறோம்...

எவ்வளவு நேரம் கணக்கில்லை...

காலம் தான் தொணதொணவென பேசி

எங்களை ஒரு நிகழ் கால உணர்வு நிலைக்கு

கொண்டு வந்தது...

நாங்கள் பிரிய மனமில்லாமல் பிரிந்து

செல்கிறோம்...

அங்கே ஒரு கூட்டம்

என்னை பார்த்து

ஹோவென சூழ்ந்துக் கொண்டு 

கேட்கிறது...

ஏன் இவ்வளவு நேரம் என்று...

நானும் அமைதியும்

பேசாமல் பேசி மகிழ்ந்த ரகசியத்தை

சொல்ல தோன்றாமல்

ஒரு மெல்லிய சிரிப்புடன்

அவர்களோடு கலக்கிறேன்...

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சங்க இலக்கியம்//நற்றிணை பாடல் (5)

  நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப, அகல் வாய்ப் பைஞ் சுனைப் பயிர்  கால்யாப்ப, குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர் நறுங் காழ் ஆரம் சுற்றுவன அகை...