ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வியாழன், 23 நவம்பர், 2023

எனது ஞாபகமாக பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள்...


வாழ்ந்தது சில காலம்

வாழப் போவதும் சில காலம்

இதில் உணர்வுப்பூர்வமான

நிகழ்வுகள் சில காலம்;

தொலைந்த நினைவுகள்

சில காலம்;

தொலைக்க வேண்டிய நினைவுகள்

சில காலம்;

இப்படி பல பல....

சற்றே அமைதியாக

என்னை விட்டு 

கொஞ்சம் தொலைவிலே

இருங்கள்;

நான் எனது மொத்த வாழ்வையும்

இந்த புகைத்தல் எனும்

வஸ்துவின் துணைக் கொண்டு

வேடிக்கை பார்த்து 

கொஞ்சம் பலமாக

சிரித்து விட்டு

போகிறேன்...

வாழ்தலின் புரிதல்

நான் கடந்து வந்த பாதைகளில்

எங்கேனும் சிதறி இருந்தால்

அதை எனது ஞாபகமாக

நீங்கள்

பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள் ...

அதுவே எனது வாழ்விற்கான

பெரும் ஆறுதல் ...

#இளையவேணிகிருஷ்ணா.

தேதி 23/11/23.

நேரம் மாலை4:48.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாலையோர புழுதியில் நனைந்த ஓவியம்...

 அந்த பிரமாண்டமான வீட்டில்  வாழ்ந்து கொண்டு  இருப்பவர் சில நாட்களில்  உற்சாகம் இழந்து  அவர் தாம் பார்த்து பார்த்து கட்டிய  அந்த வீட்டில்  உள...