ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

செவ்வாய், 15 நவம்பர், 2022

அவளோடு ஒரு பயணம்

 

அவளோடு ஓர் பயணம்:-

அவள் கலாச்சாரத்தை பின்பற்றுபவளா இல்லை முறியடித்து நடப்பவளா தெரியாது.ஆனால் அவளை பார்க்கும் போது ஏதோவொரு ஈர்ப்பு வந்து விடும். அவள் தன்னை கவனிப்பவர்கள் பற்றியோ கவனிக்காதவர்கள் பற்றியோ கவலைப்படாதவள்.அவள் தனது பயணத்தில் தொடர்ந்து பயணிப்பவர்கள் பற்றியோ பயணத்தை தொடர மறுத்தவர்களையோ பற்றி எந்த கவலையும்படாதவள்.ஏனெனில் அவள் எப்போதும் அவள் சுயத்தை நேசித்தவள்.

  சில சமயங்களில் அவள் அவ்வாறு நடந்து கொள்வது சரியா என்று தோன்றும் எனக்கு மற்றும் அவளை நேசித்தவர்களுக்கு.அவளிடம் கேட்டால் நிச்சயமாக பதில் சொல்ல மாட்டாள்..ஓர் புன்னகை மட்டுமே கிடைக்கும். அதனால் எவரும் கேட்க மாட்டார்கள்.

  வாழ்க்கை என்றால் ஏதோவொரு வட்டத்தில் அடங்குவதாக அவள் நினைத்தது இல்லை.. வாழ்க்கை மிகவும் எளிமையானது என்றே அவள் என்னிடம் சொல்லி வந்தாள்.

   வாழ்க்கையை எப்போதும் படிக்க தொடங்கியதே இல்லை..அதில் ஓர் இனிமையான ஆனந்தமான அனுபவத்தையே விரும்பினாள்.விரும்பினாள் என்று சொல்வதை விட அதை அப்படியே ஏற்றுக்கொண்டாள்..

  எதற்காகவும் அவள் கலங்கியதே இல்லை.. அவளோடு இருக்கும் போது எவ்வளவு நேரம் சென்றாலும் தெரிவதில்லை..அவள் தான் என்னை கட்டாயமாக அனுப்பி வைப்பாள் இல்லத்திற்கு.அவளோடு சேர்ந்து தான் நான் வாழ்க்கை என்றால் என்ன அதை எப்படி அனுபவித்து வாழ்வது என்று கற்றுக்கொண்டேன்.

  நீங்கள் ஏன் திருமணம் செய்து கொள்ள நினைக்கவில்லை என்று ஒருநாள் கேட்டேன்.. அதற்கு அவள் ஓர் புன்னகையோடே சொன்னாள்..வாழ்க்கை என்பது திருமணம் செய்து கொள்வதால் நிறைவடையும் என்று நினைக்கவில்லை என்று.. திருமணம் என்பது காமத்தை ஓர் கட்டுக்குள் வைத்திருக்க சமுதாயம் ஒழுங்கு மாறாமல் இருப்பதற்காக ஏற்பட்டது.நான் காமத்தை பெரிதாக நினைக்காதபோது அது எனக்கு தேவையில்லாத விலங்குதானே என்று என்னை நோக்கி பாயும் தோட்டா போல கேள்வி கேட்கும் போது நான் பதில் சொல்ல தோன்றாமல் அவள் சொல்வதை ஆமோதித்து தலையசைத்தேன்.


அவளோடு பயணப்பட ஆசையா உங்களுக்கு.. காத்திருங்கள்..😊

#அவளோடுஓர்பயணம்


#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பெரும் போரின் உக்கிரத்தை தணித்து...

 நீயோ குருட்டு பிடிவாதத்தால் எவரின் தூண்டுதலாலோ விலகி விலகி பயணிக்கிறாய்  என்னிடம் இருந்து... அந்த உக்ரைனை போல... நானோ உன்னை  என் பேரன்பின் ...