ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

ஞாயிறு, 6 நவம்பர், 2022

உயிர் சுமந்த காயத்தை...


நீர் குமிழியை

நான் ரசித்துக் கொண்டு

இருக்கும் போதே

உடைப்பட்டு அழிவதை

தாங்க முடியாத நான்

உயிர் சுமந்த

இந்த காயத்தை

தீயில் சுடும் நாளை

ஏற்பேனோ?

நிலையாமை ஒன்று

கண்ணெதிரே பாடம்

நடத்தி புன்னகைத்து செல்கிறது...

நான் வீண் மாயா விசயத்தில்

மீண்டும் மீண்டும் துன்பப்பட்டு

கண்ணீர் வடிக்கிறேன்..

காலமோ இதை எதையும்

கண்டுக் கொள்ளாமல்

எனது கண்ணீருக்கு

சிறு ஆறுதல் கூட

சொல்லாமல் பயணித்து

வாழ்வின் பந்தம்

பொய்யென நிரூபித்து

மௌனமாக கடந்து செல்வதை

நான் சிறு சிரிப்போடு

பார்த்து வாழ்வில் கரைகிறேன்

மாயமாக...

#இளையவேணிகிருஷ்ணா.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அந்த ஏதோவொரு தேடலில் தான் நான் தொலைந்து போய் இருக்க வேண்டும்...

அந்த ஏதோவொரு  தேடலில் தான்  நான் தொலைந்து  போய் இருக்க வேண்டும்... ஒரு முறை அந்த வழியில்  சென்றதற்காக இவ்வளவு  பெரிய தண்டனை வேண்டாம் என்று  ...