ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

சனி, 5 நவம்பர், 2022

காதலெனும் பெருவெளி


காதலெனும் பெருவெள்ளம்

மனதில் கரைபுரண்டு

ஓடுகிறது...

உன் நேசமும் என் நேசமும்

கைகோர்த்து சங்கமித்து

நம்மை வாழ்வின் சூட்சமம்

எனும் பெருவெளியில்

பயணிக்க வைக்கிறது..

நம்மை ஆச்சரியமாக

பார்க்கிறார்கள் அங்கே பலர்..

நாமோ நம்மையே ஆச்சரியமாக

பார்த்துக் கொண்டு பயணிக்கிறோம்

இங்கே பெரும் காதலில் 

கரைகின்ற சுகத்தை விட 

வேறு சுகம்

எதில் உள்ளது என்று

நமக்கு நாமே 

சொல்லிக் கொண்டே

நாம் பயணிக்கும் தூரம்

இன்னும் எவ்வளவு தூரமோ

அந்த பெருவெளிக்கே தெரியாது

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மர்ம வீடு பாகம் (1)

அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...