ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வியாழன், 3 அக்டோபர், 2024

தேடிக் கொண்டு தான் இருக்கிறேன்...


தேடிக் கொண்டு தான் இருக்கிறேன்...

தேடலின் புரிதல் எதுவென்று 

உணராமலேயே... 

வாழ்வின் பெரும் சுமைகள் 

எனை அழுத்தி இந்த பிரபஞ்சத்தின் 

கடைசி துகளில் எனை புதைத்து விட 

முயன்ற போதும் 

தேடிக் கொண்டு தான் இருக்கிறேன்...

ஏதொவொன்று என் தேடலின் 

பசிக்கு அகப்படாதா என்று...

அந்த ஏதோவொன்று 

ஏதோவொன்றாக இல்லாமல் 

ஒரு நாள் 

என் கண்களை கூசும் அளவு 

பெரும் சோதியாக என் முன் 

எல்லையற்று நிற்கும் போது 

நான் பேரமைதி கொண்டு 

அந்த சோதி பிழம்பில் கலந்து 

என் தேடலின் பெரும் பசி 

அடங்கி விட்டது...

என் தேடலுக்கான 

பெரும் பயணத்தின் சாலை 

தற்போது என் தேடலின் சுவையை 

அங்கே பயணிப்பவர்கள் 

நாசி துளைக்க...

என் ஆன்மாவின் 

கள்ளமற்ற நிலையை 

இந்த சாலையை கடப்பவர்கள் 

சூட்சமமாக உணர்வதை 

பேச்சற்ற மௌனியாக அனுபவித்து 

கடந்து செல்வதை 

இந்த பிரபஞ்சம் வெறுமனே 

வேடிக்கை பார்ப்பதை தவிர 

வேறென்ன செய்து விட முடியும்...

#தேடலின்பயணம் 

நாள் 03/10/24/வியாழக்கிழமை.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பெரும் போரின் உக்கிரத்தை தணித்து...

 நீயோ குருட்டு பிடிவாதத்தால் எவரின் தூண்டுதலாலோ விலகி விலகி பயணிக்கிறாய்  என்னிடம் இருந்து... அந்த உக்ரைனை போல... நானோ உன்னை  என் பேரன்பின் ...