ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வியாழன், 10 அக்டோபர், 2024

அவர்களின் கேள்வி...

 


ஏன் உனக்கு இந்த கர்வம் என்று 

அங்கே பலபேர் எனை வழி மறித்து 

கேட்கிறார்கள்...

நானோ என் தேவைகள் 

மிகவும் சொற்பம் என்று 

சொல்லி விட்டு அங்கிருந்து 

நகர்கிறேன் 

எனை கடந்து சென்ற பட்டாம்பூச்சி 

என் தோளில் அமர்ந்து 

எந்தவித பயமும் இல்லாமல் 

பயணிக்கிறது...

இதை எல்லாம் வேடிக்கை 

பார்த்த மக்கள் 

என் பதிலில் திருப்தியடையாமல் 

அந்த பட்டாம்பூச்சியையும் சேர்த்து 

வசைப்பாடுகிறார்கள் 

இந்த காலம் அதையும் 

சும்மா வெறுமனே

புன்முறுவலோடு 

வேடிக்கை பார்த்துக் கடக்கிறது....

#அவர்களின்கேள்வி

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 11/10/24/வெள்ளிக்கிழமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாலையோர புழுதியில் நனைந்த ஓவியம்...

 அந்த பிரமாண்டமான வீட்டில்  வாழ்ந்து கொண்டு  இருப்பவர் சில நாட்களில்  உற்சாகம் இழந்து  அவர் தாம் பார்த்து பார்த்து கட்டிய  அந்த வீட்டில்  உள...