ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

திங்கள், 21 அக்டோபர், 2024

தொலைந்து விட்ட பாதையை தேடி...


தொலைந்து விட்ட பாதையை 

தேடி பயன் இல்லை...

உருண்டோடி எனை பதம் பார்த்து 

களிப்போடு சிரிக்கும் காலத்தின் 

கேலியிலிருந்து கொஞ்சம் 

எனை விடுவித்துக் கொண்டு 

இங்கே சாலையின் ஓரத்தில் 

கொஞ்சம் கொஞ்சமாக தன்னை 

இந்த பிரபஞ்சத்தில் இருந்து 

விடுவித்துக் கொள்ள துடிக்கும் 

இந்த மாலை வேளையை 

ஆழ்ந்த அமைதியோடு 

வேடிக்கை பார்த்து 

ஆசுவாசப்படுத்திக் கொண்டு

விடை பெற்று போக 

துணிந்த கால்களுக்கு 

மட்டும் ஏதோவொரு பாதையை 

காட்டி விட்டு நகர்ந்து விடு என்று

காலத்திடம் 

சொல்ல துடிக்கும் இதழ்களை 

ஏனோ நான் கட்டுப்படுத்தி 

அங்கேயே நிற்கிறேன்...

இருளுக்கும் அந்த சாலைக்கும் 

பெரும் துணையாக இருந்து விட்டு 

போகட்டுமே என்று...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 21/10/24/திங்கட்கிழமை/அந்திமாலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அந்த வெறுமையோடு கூடிய பயணத்தில் ஒரு துணையாக...

அந்த வெறுமையோடு கூடிய  பயணத்தை  நான் பயணித்துக் கொண்டு  இருக்கிறேன்... ஒரு ஆழ்ந்த அமைதியும் என்னோடு  சத்தம் இல்லாமல் பயணிக்கிறது... நான் அந்...