ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

சனி, 26 அக்டோபர், 2024

அந்த காலி கோப்பையில் கனத்து கிடக்கும் தேநீர் போல...


அந்த காலி கோப்பைக்குள் 

கனத்து கிடக்கும் தேநீர் போல

என் மனதின் மூலையில் 

கனத்து கிடக்கிறது 

ஒரு துளி கவலை...

எந்தவித பருகுதலும் இன்றி 

மதிப்பற்ற கோப்பையாக 

அதை அவ்விடத்தில் விட்டு 

செல்கிறேன்...

அங்கே பறந்து வந்த ஈ ஒன்று 

அதில் விழுந்து உயிர் விட்டு 

சென்றதை அங்கே இருந்த 

யாரோ ஒருவரின் பேச்சில் 

உணர்கிறேன்...

இங்கே மதிப்பற்ற தேநீர் கோப்பை 

ஒரு ஜீவனின் உயிர் விட 

காரணமானதை எண்ணி எண்ணி 

கவலைக் கொள்ள துடிக்கும் மனதை 

கொஞ்சம் கோபமாக 

திட்டி தீர்க்கிறேன்...

மீண்டும் நான் பருகாத 

தேநீர் அடங்கிய கோப்பையை 

எந்த இடத்திலோ வைத்து விட்டு 

அங்கே ஏதோவொரு ஜீவனின் 

கொலைகளமாக மாறி விடக் கூடாது 

என்று நினைத்து...

#காலிக் கோப்பை..

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 27/10/24/ஞாயிற்றுக்கிழமை.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சித்த நிலை யாதென்று புரிகின்ற வேளையில்...

சித்த நிலை யாதென்று  புரிகின்ற வேளையில்  சுவையுள்ள பதார்த்ததின் வாசம்  நாசியை வசீகரிக்கிறது... சுத்தமான ஆத்மாவின்  தீராத தாகத்தை கண்டுக்கொள்...