ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

திங்கள், 21 அக்டோபர், 2024

அந்த குரலினை எங்கே தேடி அலைவேன்...


அந்த மழைக் கால 

இரவொன்றில் 

எந்தவித ஆர்ப்பாட்டமும் 

இல்லாமல் மெதுவாக 

எனை கடந்து செல்கிறது 

சாலையில் வழிந்தோடும் 

அந்த மழைநீர்...

என் குடையில் இருந்து வழியும் 

மழைநீரின் ஆறுதல் குரலை 

கேட்க வழி இல்லாமல் 

என் செவிகளை 

ஆக்கிரமிக்கிறது 

எங்கோ இருந்து வந்த அந்த 

விலை உயர்ந்த சிற்றுந்தின்

அந்த ஒலிப்பானின் பேரொலி...

இதை கவனித்த சாலையின் 

ஒரு பகுதி 

என்னை இலகுவாக கை பிடித்து 

இழுத்து ஓரமாக சேர்த்து விடும் 

அதேநேரத்தில் 

என் குடையில் வழிந்தோடும் 

மழை நீரும் நடுங்கி 

தன் ஆறுதல் குரலை 

உள்ளிழுத்துக் கொண்டதை 

நான் எவ்வளவோ முயற்சி செய்தும் 

வெளிக் கொணர முடியவில்லை...

இங்கே மதிப்பற்ற குரல் கூட்டத்தின் 

ஒரு கோடி துகள்களில் இதன் குரலை 

எங்கே தேடி அலைவேன் 

இந்த மழைக் கால இரவில்...

#மழைக்கவிதை.

நாள் 21/10/24/திங்கட்கிழமை.

அந்தி மங்கி ஒரு நாழிப் பொழுதில் 

எழுதிய கவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சித்த நிலை யாதென்று புரிகின்ற வேளையில்...

சித்த நிலை யாதென்று  புரிகின்ற வேளையில்  சுவையுள்ள பதார்த்ததின் வாசம்  நாசியை வசீகரிக்கிறது... சுத்தமான ஆத்மாவின்  தீராத தாகத்தை கண்டுக்கொள்...