ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

புதன், 9 அக்டோபர், 2024

இந்த ராஜாவின் பிதற்றலால் அந்த ராஜா என்ன செய்வார்?

 


இன்றைய தலையங்கம்:-

சிதம்பர நடராஜர் கோயில் வளாகம் விளையாட்டு மைதானமா?

அறநிலைய துறையை ஊர் ஊராக சென்று விமர்சனம் செய்யும் பிஜேபினர் சிதம்பர நடராஜர் கோயிலில் மட்டை பந்து விளையாடியதை நியாயப்படுத்துவது போல பிஜேபி ஒருங்கிணைப்பாளர் H.ராஜா செய்தியாளர்களிடம் பேசுவது எவ்வளவு முரணான அதேசமயத்தில் அருவருக்கத்தக்க விசயம் என்று அந்த கட்சியை ஆதரிக்கும் மக்கள் உணருங்கள்...இதே போல அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் மட்டை பந்து வீச்சு விளையாட்டு நடந்து இருந்தால் எவ்வளவு வியாக்கியானம் பேசி இருப்பார்கள்... இந்த சிதம்பர நடராஜர் கோயிலில் நடந்த மட்டை பந்து வீச்சு விசயத்தை நீதிமன்ற மதுரை கிளைக்கு உடனடியாக எடுத்துச் செல்ல வேண்டும்... ஏனெனில் அங்கே நாட்டியாஞ்சலி நடத்தக் கூட இந்த தீட்சிதர்களிடம் எவ்வளவு போராட்டம் ஒரு காலத்தில் நடந்தது என்று மக்களுக்கு தெரியும்... நடராஜரின் நடன கலையை உலகம் முழுவதும் உணர்த்த நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடத்த சில வருடங்களுக்கு முன்பு எவ்வளவு கெஞ்ச வேண்டியது இருந்தது இந்த தீட்சிதர்களிடம்... தற்போது மட்டை பந்து வீச்சு விளையாட்டு தீட்சிதர்கள் அங்கே நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்... கேட்டால் பிஜேபி ஒருங்கிணைப்பாளர் ராஜா ஏன் அங்கே கிரிக்கெட் விளையாடினால் என்ன தவறு என்று கேட்கிறார்.. மேலும் அது கோயில் இடம் இல்லையாம் அது விளையாட்டு மைதானம் என்கிறார்... இப்படியான தலைவரை வைத்துக் கொண்டு இந்த பிஜேபி இன்னும் இந்த தமிழ் நாட்டில் என்ன பாடுபடப் போகிறதோ யாருக்கு தெரியும்... ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்.. இந்த பிஜேபி மேலிட தலைவர்கள் டெல்லியில் முதலில் நல்ல தமிழ் பயிற்று பள்ளியில் சேர்ந்து தமிழ் கற்றுக் கொண்டால் தான் அவர்களுக்கு அவர்கள் நிர்ணயம் செய்த தலைவர்களாலேயே எவ்வளவு கூத்து இங்கே நடக்கிறது என்று புரிந்துக் கொள்ள முடியும்...அதை விட்டு விட்டு இங்கே ரோடு ஷோ நடத்தி ஒரு புண்ணியமும் இல்லை ஜீ...

#சிதம்பரநடராஜர்கோயில்வளாகம்.

#இன்றையதலையங்கம்.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 09/10/24/புதன்கிழமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பெரும் போரின் உக்கிரத்தை தணித்து...

 நீயோ குருட்டு பிடிவாதத்தால் எவரின் தூண்டுதலாலோ விலகி விலகி பயணிக்கிறாய்  என்னிடம் இருந்து... அந்த உக்ரைனை போல... நானோ உன்னை  என் பேரன்பின் ...