தனது தந்தை தான் கேட்ட அந்த விளையாட்டு பொம்மையான யானையை வாங்கி வருவார் என்று பெரும் எதிர்ப்பார்ப்பு சுமந்து சோர்ந்து
உறங்கி விட்ட அந்த குழந்தைக்கு தெரியாது...
அன்றைய அலுவலக சண்டையில் அந்த யானை
வாங்குவதை மறந்து விட்டு
தனது ஊருக்கு இருந்த அந்த கடைசி பேருந்து படியேறிய போது
தனது குழந்தையின் எதிர்பார்ப்பை மறந்து விட்டோமே என்று
மீண்டும் இறங்க முயலும் போது அந்த பேருந்து நடத்துனர் அவரது கையை பிடித்து இழுத்து பேருந்தில் உள்ளே தள்ளி
பேசிய வசவு வார்த்தையான
உன் இறுதி பயணத்தை நடத்திக் கொள்ள
என் இந்த வாழ்வின் பயணத்தை வழி மாற்றி விடாதே என்ற அந்த வசவுக்காக அவரிடம் சண்டைக்கு போக மனமில்லாமல் பயணத்தை முடித்து வீட்டுக்கு நுழைந்து
அந்த உறங்கிக் கொண்டிருந்த குழந்தையின்
நெற்றியில் முத்தமிட்டு நகரும் போது
பாதி உறக்கத்திலும் மறக்காமல் அப்பா யானை பொம்மை எங்கே என்று
முணுமுணுத்து விட்டு உறங்கி விட்ட குழந்தைக்கு நாளை
எப்படியேனும் முதலில்
அந்த யானை பொம்மையை வாங்கி கை பையில் வைத்துக் கொண்டு தான் அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் என்று....
#அந்த வசவு வார்த்தை.
நாள் 18/10/24/வெள்ளிக்கிழமை.
##இளையவேணிகிருஷ்ணா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக