ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வியாழன், 3 அக்டோபர், 2024

சாத்தியமற்ற நிகழ்வுகளை அசைப்போட்டு...


அந்த சாத்தியமற்ற நிகழ்வுகளை 

அசைப் போட்டு 

கடத்திக் கொண்டு 

இருக்கிறேன் நான் 

இந்த காலமோ 

என் நிலைமை புரியாமல் 

உனக்கென்ன 

நினைத்த போதெல்லாம் 

கவிதை எழுதி வீசுகிறாய்...

ஓவியம் வரைந்து 

அந்த பல வண்ணத்தில் 

கரைகிறாய்...

காலநேரம் இல்லாமல் 

இயற்கையை ரசித்து 

ஏதோவொரு மனதிற்கு 

நெருக்கமான பாடலை 

உச்சஸ்தாயில் பாடி 

அங்கே நள்ளிரவு உறக்க பயணத்தில் 

இருப்பவர்களை 

தட்டி எழுப்புகிறாய்...

இவை எல்லாம் எவருக்கும் 

சாத்தியமற்றது தோழியே 

என்று வர்ணித்து ...

என் சூழலை கிறங்கடிக்க 

செய்து விடும் போது 

போதும் நிறுத்து காலமே 

உன் புகழுரையை...

இங்கே என் அவஸ்தைகளை 

காணாமல் போக செய்யும் 

அந்த நிகழ்வுகள் மீது 

கண் வைக்காதே...

நான் நிச்சயமற்ற உலகத்தின் 

போக்கை கொஞ்சம் 

மறக்க நினைத்து 

ஏதேதோ செய்து எனை 

ஆற்று படுத்திக் கொள்வதில் 

உனக்கென்ன பிரச்சினை என்று கொஞ்சம் கோபமாக கேட்டதில் 

அது கொஞ்சம் 

அதிர்ந்து தான் போனது...

சரி சரி உன் கையால் 

அந்த இஞ்சி தேநீரை எனக்கு தந்து 

என் மீதான 

உனது கோபத்தை அந்த சுவையில் 

கரைத்து விடு என்று சமாதானம் பேச 

நான் சிரித்துக்கொண்டே 

அதற்கான தேநீரை தயாரிக்க 

என் உணவு கூடத்திற்கு சென்றேன்...

#காலத்தின்கேலி.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 04/10/24/வெள்ளிக்கிழமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சித்த நிலை யாதென்று புரிகின்ற வேளையில்...

சித்த நிலை யாதென்று  புரிகின்ற வேளையில்  சுவையுள்ள பதார்த்ததின் வாசம்  நாசியை வசீகரிக்கிறது... சுத்தமான ஆத்மாவின்  தீராத தாகத்தை கண்டுக்கொள்...