ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

திங்கள், 28 அக்டோபர், 2024

இன்றைய தலையங்கம்

 


இன்றைய தலையங்கம்:-நேற்று விஜய் கட்சி நடத்திய மாநாட்டில் பேசிய விஜய் பேச்சு ரசிக்கும் படி இல்லை.துவக்கம் என்பது எப்போதும் வணக்கம் சொல்லி அழகாக ஆரம்பித்து மிகவும் அழகாக பேசி இருக்கலாம்...தேவையே இல்லாமல் உணர்ச்சி வசப்பட்டு கத்தி பேசியதை அவரது ரசிகர்கள் வேண்டும் என்றால் ரசிக்கலாம்... ஆனால் பொதுவெளியில் எப்படி நேர்த்தியோடு பேச வேண்டும் என்று கூட பயிற்சி எடுக்கவில்லை என்று தான் தோன்றுகிறது... மேலும் அவர்களே என்று சொல்வதை கேவலமாக சித்திரித்து பேசி இருக்கிறார்... அந்த வார்த்தை என்பது ஒருவருக்கு கொடுக்கும் மரியாதை என்பது கூட புரிந்துக் கொள்ள முடியாத அளவுக்கு பொது அறிவு... ஆரம்பம் என்பது அசட்டுத்தனமாக அனைவரையும் பொடி வைத்து எதிர்ப்பது அல்ல... நாம் நமது செயல்களில் மக்களோடு எப்போதும் எப்படி இருக்க போகிறோம் என்பதே... மேலும் அவர் சித்தாந்த ரீதியாக ஒரு கட்சியை எதிர்ப்பதாகவும் அரசியல் ரீதியாக ஒரு கட்சியை எதிர்ப்பதாகவும் சொன்னது மிகவும் கேலிக்குரியது.. அப்போது அவர் சொல்ல வருவது பிஜேபி அரசியல் கட்சி வரிசையில் இல்லையா என்று கேட்க தோன்றுகிறது... அரசியலில் ஒரு மாநாடு போடுகிறோம் என்றால் அந்த மாநாட்டில் பங்கேற்பவர்களை முதலில் ஒழுங்குப்படுத்த முறைப்படுத்த தன்னார்வாளர்களை அந்த கட்சியில் இருந்து ஏற்பாடு செய்து இருக்க வேண்டும்.... ஆனால் அங்கே இன்று பார்க்கும்போது ஏதோ போர்க்களம் நடந்த இடம் போல இருக்கிறது. கிட்டத்தட்ட இரண்டாயிரம் நாற்காலிகளை அவரது கட்சி தொண்டர்கள் கன்னாபின்னாவென்று உடைத்து போட்டு வைத்து இருக்கிறார்கள்... அந்த தொண்டர்கள் தமக்குள்ளேயே ஒரு ஒழுங்கு இல்லாத போது எப்படி கட்சி பணிகளை நீங்கள் நினைப்பது போல செய்வார்கள் என்று வினா எழுகிறது அல்லவா... எப்போதும் ஒரு கட்சி தலைமை என்பது ஒரு ஒழுங்கை முதலில் கடைப்பிடிக்க வேண்டும்... ஒரு பொதுவெளியில் எப்படி இருக்க வேண்டும் என்று கற்றுக் கொள்ள வேண்டும்... மேலும் மாநாட்டு ஏற்பாட்டாளர்களுக்கு வந்து கலந்துக் கொண்ட தொண்டர்களுக்கு அந்த இடத்தை கொடுத்து உதவிய விவசாயிகளுக்கு நன்றி சொல்லி இருக்க வேண்டும்... பேச்சின் இடையிடையே ஒரு நிமிடம் ஒரு நிமிடம் என்று அடிக்கடி சொல்லி ஏதோ சொல்ல மறந்த விசயத்தை ஓடி போய் ஓடி போய் சொல்லியது எல்லாம் மிகவும் நகைச்சுவையாக தான் இருந்தது... கட்சி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஒரு வரையறை உள்ளது... ஆனால் இவரை வழி நடத்துபவர் யாரோ இவரை சரியான பாதையில் அழைத்துச் செல்வது போல தெரியவில்லை...கூட்டத்தை பங்கேற்ற தொண்டர்களிடம் இனி மதுவை தொட மாட்டேன் என்று ஒரு வாக்குறுதி வாங்கி இருக்கலாம்... இங்கே எனக்காக இவ்வளவு தூரம் வந்து இருக்கிறீர்கள்.. ஆனால் தங்களது குடும்பத்தை முதலில் நேசிக்க வேண்டும் நீங்கள் என்று சொல்லி வழி அனுப்பி வைத்து இருக்கலாம்... இப்படி எனக்கு நேற்று விஜய் மாநாட்டை பார்த்து எந்த நேரத்தில் என்ன அசாம்பாவிதம் நடந்து விடுமோ என்று தான் தோன்றியது... ஏனெனில் அங்கே ரசிகர்கள் நடந்துக் கொண்ட விதம் அப்படி... பொதுவாக சினிமா என்பது ராகு தான் வழி நடத்துவார்... அந்த ராகு அரசியல் ஆசையை தூண்டுவார்...ஆனால் அந்த ராகு வீதியில் விட்டு விட்டு ஓடி விடுவார்..பொதுவாக அரசியல் ஆட்சி அதிகாரம் எல்லாம் கிடைக்க ஜாதகத்தில் சூரியன் செவ்வாய் சனி கிரகங்கள் கையில் தான் உள்ளது என்பதே யதார்த்தமான உண்மை... பார்ப்போம் என்ன நடக்கிறது என்று...

#கட்சிஆட்சிஅதிகாரம்.

#இன்றையதலையங்கம்

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சித்த நிலை யாதென்று புரிகின்ற வேளையில்...

சித்த நிலை யாதென்று  புரிகின்ற வேளையில்  சுவையுள்ள பதார்த்ததின் வாசம்  நாசியை வசீகரிக்கிறது... சுத்தமான ஆத்மாவின்  தீராத தாகத்தை கண்டுக்கொள்...