மனதை கலங்கடிக்கும்
நிகழ்வுகள் மூச்சு திணறடிக்கும்
அளவுக்கு நிகழ்ந்துக் கொண்டே
இருக்கும் போது ஒரு கட்டத்தில்
உணர்வற்ற பொம்மையாகி போய் விடும்
வரம் கிடைத்தால் போதும்...
அதுவே எனக்கு வாழ்வின்
மிக அரிய பொக்கிஷமாக
பாதுகாத்து வைத்துக் கொள்வேன்
அது ஒரு குழந்தையின் கையில்
விளையாட்டு பொருளாக
இருந்து விட்டு
போகட்டுமே என்று...
நாள்:10/02/24.
சனிக்கிழமை.
#இளையவேணிகிருஷ்ணா.
பழகிக்கொள்வது ஒரு வகையில் சிறந்ததுதான்..
பதிலளிநீக்கு