ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

ஞாயிறு, 10 செப்டம்பர், 2023

ஒரு பெரும் இசையில் இந்த பிரபஞ்சம்...

 


ஒரு பெரும் இசையில்

இந்த பிரபஞ்சம் சத்தம் இல்லாமல்

இயங்கிக் கொண்டு

இருக்கிறது...

அந்த இசையின் நதியில்

நானும் சத்தம் இல்லாமல்

தாகம்

தீர்த்துக் கொள்கிறேன்...

என்னை கடந்து நீண்ட தூரம்

சென்றவர்கள் பெரும் தாகத்தோடு 

அலைகிறார்கள் என்று நான் 

கேள்விப்படும் போதும் 

நான் இங்கே

எந்த சலனமும் இல்லாமல்

எனது தாகத்தை 

முற்று செய்ய மனமில்லாமல்

பருகிக் கொண்டே இருக்கிறேன் 

அந்த நதியின்

தெளிந்த நீரோடையில்...

#இரவுகவிதை.

நேரம் இரவு:9:23.

செப்டம்பர்10.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இத்தனை வன்மமும் எதற்காக??

    என் மீதான  காதல் உணர்வுகளில்  ஒரு வித மையல் கொண்டு என்னை நெருங்காதே... உன் மீதான  என் பெரும் காதலின்  அலையில் நீ அடித்து  சென்று நடுக் க...