ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

சனி, 21 ஜனவரி, 2023

நொடியின் நேசம்

 

நீங்கள் சோர்வுறும் போதெல்லாம்

உங்கள் அருகில் கண்ணுக்கு 

தெரியாத நொடி

உங்களை ஆரத்தழுவி

ஆசுவாசப்படுத்திக் கொள்ள

காத்திருக்க

நீங்களோ அந்த நொடியின்

பெரும் காதலை புறக்கணித்து

வேறொன்றில் காயப்பட்டு

நிற்கும் போது

உங்களை பேரன்போடு 

நேசித்த நொடி

உங்கள் மீது கொண்ட பிரியத்தை 

தனது கண்ணீரில் கரைக்கிறது...

#நொடியின்நேசம்.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாலையோர புழுதியில் நனைந்த ஓவியம்...

 அந்த பிரமாண்டமான வீட்டில்  வாழ்ந்து கொண்டு  இருப்பவர் சில நாட்களில்  உற்சாகம் இழந்து  அவர் தாம் பார்த்து பார்த்து கட்டிய  அந்த வீட்டில்  உள...