ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

புதன், 11 ஜனவரி, 2023

துயரம் வெறும் தோசையிலா

 

அங்கே

பெரும் துயரத்தில்

நடுங்கி கதறுகிறான் 

ஒருவன்...

இங்கே காலை உணவில்

தினமும் தோசை தானா என்று துயருற்று

சினந்துக் கொள்கிறான்..

இன்னொருவன்

தன் மனைவியிடம்...

அதுசரி ...

துயரங்கள் இங்கே

துயரங்கள் தானே..

ஆனால் ஒரு விசயம்...

துயரங்களில் ..

அதன் இயல்பில்...

கரைய நினைப்பவர்கள்

யோசியுங்கள்..

அதன் இயல்பை

மாற்ற முயற்சி செய்யாதீர்கள்...

துயரத்தின் மகிமை

நீங்கள் நினைப்பது போல

வெறும் தோசை தானா

என்று உப்புசப்பு இல்லாமல்

அடங்கி விடுவது இல்லை...

#வாழ்வியல்கவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அந்த வெறுமையோடு கூடிய பயணத்தில் ஒரு துணையாக...

அந்த வெறுமையோடு கூடிய  பயணத்தை  நான் பயணித்துக் கொண்டு  இருக்கிறேன்... ஒரு ஆழ்ந்த அமைதியும் என்னோடு  சத்தம் இல்லாமல் பயணிக்கிறது... நான் அந்...