ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

புதன், 11 ஜனவரி, 2023

ஒரு எழுத்தாளனின் வலி

 

ஒரு எழுத்தாளனின் வலியை

எவரிடமும் பகிர

அவ்வளவு எளிதாக

அவன் கற்பனை மனம்

இடம் கொடுப்பதில்லை..

அத்தனை வலிகளையும்

தனது கவிதைகளில்

கரைத்து விட்டு போய் விடுகிறான்...

வாசிக்கும் யாரோ தான்

அத்தனை வலிகளையும்

சுமக்க முடியாமல் சுமந்து

திரிகிறார்கள்...

என்னவாக இருக்கும்

அந்த எழுத்தாளனின் வலி

என்று...

அவர்கள் அதிலேயே திளைத்திருக்க

இங்கே எழுத்தாளனுக்கு

எழுதுவதற்கு இன்னும் பல பல கவலைகள் வரிசைக் கட்டி நிற்கிறது...

அவன் அந்த வலிகளிடம் கெஞ்சுகிறான்...

கொஞ்சம் பொறுங்கள் ...

இதோ இந்த வலியை

இந்த கவிதையில் கரைத்து விட்டு வருகிறேன் என்று..

அவன் பொழுதுக்கு

எப்படியோ இரை கிடைத்து விடுகிறது...

பாவம் அந்த கவிதையை

வாசிப்பவர்கள் தான்...

#வாழ்வியல்கவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பெரும் போரின் உக்கிரத்தை தணித்து...

 நீயோ குருட்டு பிடிவாதத்தால் எவரின் தூண்டுதலாலோ விலகி விலகி பயணிக்கிறாய்  என்னிடம் இருந்து... அந்த உக்ரைனை போல... நானோ உன்னை  என் பேரன்பின் ...